மாணவர்கள் நலனுக்காக ரவாங்கில் கல்வி யாத்திரை !


மாணவர்கள் நலனுக்காக ரவாங்கில் கல்வி யாத்திரை !
500 மாணவர்கள் கலந்து கொள்வார்கள்...
- டத்தோ சுரேஷ் தகவல்  ( ஆதிரன் )ரவாங், ஆகஸ்டு- 30


   ரவாங் வட்டாரத்தில் இருக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக ரவாங் வட்டார ஆயலங்கள், பொது இயக்கங்கள் ஏற்பாட்டில் ஆகஸ்டு 31 வியாழக்கிழமை கல்வி யாத்திரை நடைபெறவிருப்பதாக அதன் ஏற்பாடுக் குழுத் தலைவர் டத்தோ சுரேஷ் கூறினார்.

இந்த கல்வி யாத்திரை நிகழ்வை ரவாங் வட்டாரத்தில் உள்ள 10 ஆலயங்களும் 11 பொது இயக்கங்களும் இணைந்து நடத்தவுள்ளதாக தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய செய்தியில் தாமான் முகிபா ஆலயத்தின் தலைவருமான டத்தோ சுரேஷ் குறிப்பிட்டார்

ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் இந்த கல்வி யாத்திரையில் பங்கேற்ற இணையம் மூலம் பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரையில் சுமார் 400 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை 500 ஆக உயரும் என்று எதிர்பார்ப்பதாக ஏசான் ஜெயா டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளருமான சுரேஷ் சொன்னார்.


இந்த கல்வி யாத்திரையில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பால், குடம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். மாணவர்கள் 16ஆவது மைல் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இருந்து பால்குடம் ஏந்தி தாமான் முகிபா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் நோக்கி வந்தடைவார்கள். மாணவர்கள் ஏந்தி வந்த பால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். அதன் பிறகு மாணவர்களுக்கு தேர்வு குறித்த விழிப்புணர்வு வழங்கப்படும். அதைத் தொடர்ந்து பங்கேற்ற அனைத்து மாணவர்க ளுக்கும் சான்றிதழ் இலவச புத்தகப் பை (பேக்) வழங்கப்படும். இதில் 500 மாணவர்க ளுக்கு மட்டுமே புத்தகப் பை வழங்கப்படும் என்பதால் மாணவர்கள் விரைந்து தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளும்படி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ சுரேஷ் 
கேட்டுக் கொண்டார்.   தொடர்புக்கு - 019-354 7723
       

Comments