விபத்தில் சிக்கி எலும்பு முறிவுக்கு ஆளான இரண்டு இளைஞர்களுக்கு உதவி ! மனமும் குணமும் இருந்தால் வசதி குறைந்தவர்களுக்கு உதவ முடியும் என்பதற்கு இளம் தொழில் முனைவர் ஷாபுடின் ஒஸ்மான் உதாரணம் !மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிவுக்கு ஆளான இரண்டு இளைஞர்களுக்கு சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த இளம் தொழில் முனைவர் ஷாபுடின் ஒஸ்மான் உதவியுள்ளார். ஒருவருக்கு மனமும் குணமும் இருந்தால் அவர்களுக்கு உதவ முடியும் என்பதற்கு ஷாபுடின் ஒஸ்மான் ஓர் உதாரணம்.

ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் கால் முன்னெலும்பு முறிவு ஏற்பட்ட சுந்தரம் சுப்பிரமணியம் (வயது 22) என்ற இளைஞரு க்கு கால் எலும்பு முறிவை சரி செய்ய ஷஹா டெக்னொலோஜி நிறுவனத்தின் மூலம் 3 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள பிளேட்டை இலவசமாக வழங்கி சுங்கைப் பட்டாணி மருத்துவமனையில் வெற்றிக ரமாக அறுவை சிகிச்சை செய்ய உதவியு ள்ளார்.

Comments