மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் தலைமையில் காஜாங்கில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு அறவிழா!
காஜாங், நவ.17-
     டாக்டர் எம். ஜி. ஆர். கொள்கை இயக்கம்  சிலாங்கூர் மலேசியா  பொன்மனம் பொதுநலம் பேரவை
ஏற்பாட்டில் ,பொன்மன செம்மலின் நூற்றாண்டு அற விழா மிக நேர்த்தியாக நடைபெறும் என்று கொள்கை இயக்கத்தின் துணைத் தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் புரட்சித் தோழர், மெஸ்பன் கலைமாமணி சேவை திலகம் இர. சங்கிலிமுத்து தெரிவித்தார்.
      இதில் 500 பேருக்கு உணவு வழங்கப்படும், மேலும் புரட்சித்  தலைவரின் அரிய புகைப்படக் கண்காட்சி, நாட்டின் முன்னணி கலைஞர்களின் இன்னிசை, கண்கவர் நடனம், அபிநயங்கள் கொண்ட மனிதநேய கலைநிகழ்ச்சிகளில் சமூதாயப் பிரிவிற்கும் வட்டார அளவிலான  கல்வி, சமூகம், சமுதாயம், மனிதநேய உதவிகள் ஆகிய சிறப்பு சேவைகளுடன் பிரமுகர்கள் கெளரவிப்புகளுடன் மாபெரும் கலைவிழாவாக  மேற்கொள்ளப்படும் என்று செய்தியாளர் சந்திப்பில் சங்கிலிமுத்து தெரிவித்தார்.
          இதனிடையே மக்கள் திலகத்தால் பயன்படுத்தப்பட்ட முக்கியமான பொருள் ஒன்றும் ரசிகர்களின் நேரடிப் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக திரு.இர.சங்கிலி முத்து        சொன்னாார்.
        இந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா 03.12.2017 ஞாயிறுக்கிழமையன்று  சிலாங்கூர், காஜாங்,
நியூ ஏரா யுனிவர்சிட்டி கல்லூரி அரங்கில் மாலை 6.00மணிக்கு  இலவசமாக நடைபெறும்
இவ்விழாவிற்கு
அனைவரையும் மிக அன்புக் கொண்டு அழைக்கின்றோம் என ஏற்பாட்டுக்
குழுவினர்கள்
வரவேற்கின்றனர்.
தொடர்புக்கு 0126879506.

Comments