கதாநாயகன் விக்ரன் கலக்கி விட்டார்! நந்தினி, கபிலன் முயற்சிக்கு வெற்றி! காந்தசக்கி ஜாங்கிரி!

      குணாளன் மணியம்

கோலாலம்பூர், நவ.15-
           "காந்தசக்தி ஜாங்கிரி" அப்படின்னா என்னான்னு கேட்கிறீங்களா? ஆமாங்க ஒரு படம் காந்தம் போல ரசிகர்கள் மனதில் ஓட்டிக் கொள்ள வேண்டும். இதற்கு ஓர். உதாரணம் "ஜாங்கிரி". கதாநாயகன் விக்ரன் இளங்கோவன் கலக்கி விட்டார். கதாநாயகி அகல்யா மணியம் அவருக்கு இணையாக மிளிர்கிறார். மொத்தத்தில் ஜாங்கிரி மிகவும்  தித்திப்பாக இருந்தது. ஒவ்வொரு மலேசிய இந்தியரும்  பார்க்க வேண்டிய திரைப்படம் "ஜாங்கிரி".
           ஜாங்கிரி குறித்து பலரும் பல நல்ல கருத்ததுகளை வெளியிட்டிருக்கிறார்கள். இது உண்மையாகத்தான் இருக்கும் என்றாலும் அதனை பார்க்க மனம் துடித்தது. கடந்த 14 நவம்பர் செவ்வாய்க்கிழமை டத்தோ கீதாஞ்சலி ஜி ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஜாங்கிரி சிறப்பு காட்சியைக் காண தேசம் வலைத்தள குழுவோடு சென்றிருந்தேன்.
            இப்படத்தின் முதல்காட்சி ஆலயத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல் காட்சியில் கமிரா ஆலய கோபுரத்தை நோக்கி வலம் வந்து நாயகன் விக்ரன் முகத்தருகே வந்த போது பிரமித்து போனேன். இத்தகைய காட்சிகளை தமிழ்ப்படங்களில்தான் பார்த்திருக்கிறேன். ஆனால், நம்ம ஊரு படம் சினிமா திரைப்படங்களுக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளதை நினைத்து பெருமை கொண்டேன். தொடர்ந்து பிரம்மிப்போடு ஜாங்கிரியை பார்த்துக் கொண்டிருந்தேன். கதாநாயகன் விக்ரன் நடிப்பு படுசூப்பர் என்றுதான் சொல்ல வேண்டும். அவரை எனக்குத் தெரியாது. படத்தை பார்த்த போது பல படங்களில் நடித்த அனுபவத்தை பார்க்க முடிந்தது. படம் முடிந்த பிறகு அவரிடம் ஜாங்கிரி எத்தனையாவது படம் என்று கேட்டேன். இரண்டாவது படம் என்று சொன்ன போது ஆச்சரியப்பட்டேன். இரண்டாவது படம். ஆனால், 10ஆவது படம் நடித்தது போல் தெரிந்தது. அந்தளவிற்கு நடிப்புத் திறன் இருந்தது.
        கதாநாயகி அகல்யாவின்  நடிப்பும் சூப்பர். அவருக்கும் இது இரண்டாவது படம். நல்ல நடிப்பு. விக்ரனுக்கு நண்பனாக வரும் புவனன் மனோகரன்,  வில்லன்கள் கே.கர்ணன் குபேன் மகாதேவன், சுகேஸ்வரன், பாப் ஜோநாதன், வில்லனின் காதலியாக வரும் நந்தினி கணேசன், விக்ரனின் பெற்றோராக நடித்தவர்கள் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் பிரமாதம்.
        இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் புதுமுக இளைஞர்கள். இயக்குநர் கபிலன் புலோந்திரனின் முதல்படம். தயாரிப்பாளர் நந்தினியின் முதல் படம். இளைஞர் சமுதாயத்தின் முதல் முயற்சியே வெற்றிப் பெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.  மொத்தத்தில் ஜாங்கிரி தித்திப்பாய் இருந்தது.
ஜாங்கிரி குழுவினருக்கு தேசம் பத்திரிகை, தேசம் வலைத்தளத்தின் பாராட்டுக்கள்!வாழ்த்துகள்!
SYABAS JHANGRI.....

Comments