செனட்டர் பதவி! டத்தோ டி.மோகன் சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்! தேசம் குணாளன் மணியம் வாழ்த்துகோலாலம்பூர், நவ.17-
          மஇகா வழி 20 ஆண்டுகளுக்கு மேல் இந்திய சமுதாயத்திற்கு சேவையாற்றி வரும் டத்தோ டி.மோகன் அவர்களுக்கு கிடைத்த செனட்டர் பதவி அவரது சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் என்று தேசம் பத்திரிகை-தேசம் வலைத்தளத்தின்  தோற்றுநரும் தலைமை ஆசிரியருமான குணாளன் மணியம் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
         டத்தோ டி.மோகன் போராட்டம் என்றால் துணிச்சலாக இறங்கக் கூடியவர். இந்திய சமுதாயத்தின் போராட்டம் என்றால் சொல்லவும் வேண்டுமா? அந்தளவிற்கு சமுதாயத்திற்கு சிறந்த சேவையை வழங்கி வருவதாக குணாளன் மணியம் சொன்னார்.
          டத்தோ மோகன் அவர்களின் சேவைகளை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பார்த்து வருகிறேன். எதிலும் துவண்டு  போகாத மனிதர். இரண்டு பொதுத் தேர்தல்களில் தோல்வியடைந்திருந்தாலும் சேவையைக் குறைத்துக் கொள்ளவில்லை. இன்று வரையில் தொடர்ச்சியாக சேவையாற்றி வரும் டத்தோ டி.மோகன் இந்திய மக்களுக்கு  தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்று குணாளன் மணியம் கேட்டுக் கொண்டார்.
            தேசம் பத்திரிகையின் சார்பில் டத்தோ டி.மோகனுக்கு  வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்ட குணாளன் மணியம் தேசம் பத்திரிகை அவருக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று குணாளன் மணியம் தெரிவித்தார்.

Comments