கண்ணதாசன் பாடல் வரிகள் காலத்தால் அழியாதது! டத்தோ எம்.சரவணன்சிங்கப்பூர், நவ.19-      கண்ணதாசனின் பாடல் வரிகள் தலைமுறைகளை கட்டிப் போடுகின்ற ஆற்றல் கொண்டவை. அவரின் சொல் வித்தை அழகானது, அர்த்தமுள்ளது. படைப்புகள் காலத்தால் அழியாத காவியங்கள் என்று சிங்கப்பூரில் நடந்த கண்ணதாசன் விழாவில் இளைஞர், விளையாட்டுத் துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் கூறியுள்ளார்.
      எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற கவிஞர் கண்ணதாசன், தீருமூலர் தொடங்கி ஷேக்ஸ்பியர் வரை சொல்லிய கருத்துக்களை வெகு இலகுவாக பாமரனும் புரித்துக் கொள்ளும் வகையில் தேன் தமிழில் பாடல்களாக புணைந்தார்.
கவிஞரின் அபாரமான மொழித் தேர்ச்சி, மொழி மீதான ஆளுமை நம்மை பிரமிக்க வைக்கிறது. சமூகம், பொதுவுடமை, அரசியல், காதல், இலக்கியம், வாழ்வியல், உள்ளுணர்வை தட்டி எழுப்பும் தத்துவப்பாடல்கள் இப்படியாக விழிப்புணர்வை ஏற்படுத்திய மாபெரும் கவிஞன் கவியரசு கண்ணதாசன் என்று டத்தோ சரவணன் புகழாரம் சூட்டினார்.
      சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாட்டில் சிங்கப்பூர் அருள்மிகு தண்டாயுதபானி ஆலயத்தில் நடைபெற்ற. கண்ணதாசன் விழா 2017 வை டத்தோ எம்.சரவணன் தலைமையேற்று இலக்கிய உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments