இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக ஊடகவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்! மதுமாரிமுத்து உறுதிகோலாலம்பூர், நவ.17-
          இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு பலரும் இணைந்து பாடுபடுவேயாரகளேயானால் கண்டிப்பாக சமுதாயம் மேம்படும். அந்த வகையில் இந்திய சமுதாய மேம்பாட்டிற்கு ஊடகவியலாளர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக ம இ கா மத்திய செயலவை உறுப்பினர் மது மாரிமுத்து கூறியுள்ளார்.
            இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும. ஊடகவியலாளர்கள் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள். அவர்களோடு இணைந்து பணியாற்ற தம்மை தயார்படுத்மிக் கொண்டுள்ளதாக தமிழ் ஊடகவியலாளர்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளி விருந்துபசரிப்பில் கலந்து கொண்ட போது தேசம் வலைத்தள ஊடகத்திடம் மது மாரிமுத்து தெரிவித்தார்.
           கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளர்களுடன் உறவை வலுப்படுத்திக் கொண்டு வருகிறேன். மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தமிழ்நேசன், தமிழ்மலர்,தேசம் பதரதிரிகை-தேசம் வலைத்தளம் ஆகிய ஊடகங்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறேன். மக்கள் சேவைக்கு ஊடக நண்பர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் ஊடகங்களின் உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. இதன்வழி மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வாய்ப்பு ஏற்படுகிறது. ஆகையால், ஊடகங்களுடன் இணைந்து பாணியாற்றி மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவிருப்பதாக மது மாரிமுத்து தெரிவித்தார்.
           இந்த தீபாவளி விருந்துபசரிப்பு ஜாலான் சுல்தான் இஸ்மாயில் எனுமிடத்தில் உள்ள ஜூவில் இன் தீ கிராவுன் உணவகத்தில் நடைபெற்றது. தமிழ் ஊடகவியலாளர்களை மது மாரிமுத்து வரவேற்று உபசரித்தார்.

Comments