ஜாங்கிரி! உங்கள் வீட்டுப் பிள்ளைகளால் உருவானது! இந்திய மக்களே வற்றாத ஆதரவை வழங்குங்கள்! -கதாநாயகன் விக்ரன் வேண்டுகோள்! குணாளன் மணியம்கோலாலம்பூர், நவ.19-
           "உங்கள் வீட்டுப் பிள்ளைகளால் தயாரிக்கப்பட்டது ஜாங்கிரி. உங்கள் வீட்டுப் பிள்ளைகளை நீங்கள்தானே வளர்த்துவிட வேண்டும். மலேசிய இந்திய மக்களே ஜாங்கிரிக்கு வற்றாத ஆதரவை வழங்குங்கள்" என்று இத்திரைப்படத்தின் நாயகன் விக்ரன் இளங்கோவன் கேட்டுக். கொண்டுள்ளார்.
           ஜாங்கிரி பல போராட்டங்களுக்குப் பிறகு பிரசுவிக்கப்பட்ட ஒரு குழந்தை. அவன் வளர்வதற்கு உண்டான டானிக்கை மக்கள்தான் வழங்க வேண்டும் என்று மஇகா இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் கலை, கலாச்சாரப் பிரிவின் ஆதரவில் பூச்சோங் ஐஒஐ மால் திரையரங்கில் நடைபெற்ற சிறப்புக் காட்சிக்குப் பிறகு தேசம் வளைத்தள ஊடகத்திடம் விக்ரன் வலியுறுத்தினார்.
           ஜாங்கிரி திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தயாரிப்பாளர் நந்தினி மனதில் மேலோங்கியிருந்தது.  இந்நிலையில் இயக்குநர் கபிலனோடு சந்திப்பு நடத்தி வெற்றிகரமாக படத்தை தயாரித்து முடித்தோம்.
             ஜாங்கிரிக்கு அமைந்த படக்குழு அருமையான குழு. நாங்கள் எல்லா வகையிலும் ஒற்றுமையாக இருந்து படத்தை எடுத்து முடித்தோம். எனக்கு கபிலன் மிகவும் உறுதுணையாக இருந்தார். படத்தின் தயாரிப்பாளர் நந்தினியும் எனக்கு ஊக்கமளித்தார்.
         ஜாங்கிரி திரைப்படம் நாடு தழுவிய நிலையில் திரையரங்குகளில் திரையேறி வருகிறது. இப்படம் இளைஞர் குழுவினரின் முதல் முயற்சி. இது முழுக்க முழுக்க இளைஞர்களால் உருவாக்கப்பட்டது. என்னோடு அகல்யா, புவனன், கர்ணன், நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜாங்கிரிக்கு மலேசிய இந்திய மக்கள் மிகப்பெரிய ஆதரவை வழங்கி படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று விக்ரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
        ஜாங்கிரியில் சிறந்த ஒரு நடிப்பை வழங்கியுள்ளார் விக்ரன். மகிழ்ச்சி, நகைச்சுவை, சோகம் என்று பல காட்சிகளில் வந்து மக்கள் மனதில் நாயகனாக வீற்றிருக்கிறார் விக்ரன். அந்தளவிற்கு இயல்பான ஒரு நடிப்பை வழங்கியுள்ளார் நாயகன் விக்ரன். பல திறன்களைக் கொண்ட விக்ரன் மேலும் பல படங்களில் நடிக்க தேசம் பத்திரிகை, தேசம் வளைத்தளம் வாழ்த்துகிறது.
Vicran
Jhangri Production House

Comments