"நெகாராக்கு" கண்காட்சி மலேசியாவின் உருமாற்றத்தை பிரதிபலிக்கிறது! டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி பெருமிதம்

கோலாலம்பூர், நவ.17-பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்த "நெகாராக்கு" கண்காட்சி நேற்றைய, இன்றைய, நாளைய மலேசியாவின் சரித்திரம், மேம்பாடு மற்றும் உருமாற்றத்தினை பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்துள்ளது என பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ தேவமணி பெருமிதம் கொண்டார்.
         இக்கண்காட்சி தலைநகர், மெர்டேக்கா சதுக்கத்தில் நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரை ஒரு மாத காலத்திற்கு நடைபபெறவுள்ளது. மலேசிய நாடும் மக்களும் கடந்து வந்த பாதையின் சுவடுகள், சுதந்திரத்திற்கு பிந்தைய சவால்கள், இன்றைய மேம்பாடுகள், நாளைய தலைமுறைக்கான அரசின் தொலைநோக்கு திட்டங்கள் ஆகியவற்றை இலக்கியல் வடிவில் இக்கண்காட்சியில் அனுபவமாய் பெறலாம் என தேவமணி மேலும் தெரிவித்தார்.
      பிரதமர் சிந்தனையில் உதித்த நெகாராக்கு கண்காட்சி திட்டமானது நாடு மற்றும் மக்கள் மேம்பாட்டில் அரசு வகுத்துள்ள திட்டங்களையும் பரிமாணங்களையும் எளிதில் மக்களிடம் சேர்க்கும் நோக்கினை கொண்டுள்ளது. இலவசமாக நடைப்பெறும் இக்கண்காட்சிக்கு பள்ளி விடுமுறை காலத்தில் பெற்றோர்கள், குறிப்பாக இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை புரிந்து பயனடையுமாறு ம.இ.கா தேசிய துணைத் தலைவருமாகிய தேவமணி கேட்டுக் கொண்டார்.

Comments