சிகாமாட் மஇகா தொகுதித் தலைவர் மறைவுக்கு டாக்டர் சுப்ரா அனுதாபம்!
ம.இ.கா சிகாமாட் தொகுதித் தலைவரும் தெலிகோம் மணியம் என அனைவராலும் அறியப்பட்டவருமான திரு சுப்பிரமணியம் (படம்) நேற்று செவ்வாய்க்கிழமை 14 நவம்பர் 2017-ஆம் தேதி காலமானார்.அன்னாரின் இறுதி சடங்கு, இன்று (15 நவம்பர் 2017) புதன்கிழமை பகல் 1.00 மணியளவில், எண் 1, ஜாலான் அஸ்தாக்கா ஜெயா 16, தாமான் அஸ்தாக்கா ஜெயா 85000 சிகாமாட் ஜொகூர் எனும் இல்லத்தில் நடைபெறும்.மேல் விவரங்களுக்கு திரு பிரபு 014-7956202 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.சுப்பிரமணியத்தின் மறைவு குறித்து சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.காவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். தெலிகோம் மணியம் அவர்கள் சிகாமாட் தொகுதிக்கும் தொகுதி மக்களுக்கும் சிறந்த சேவையையும் கடுமையான உழைப்பையும் வழங்கி வந்த சிறந்த தலைவர் என டாக்டர் சுப்ரா அவருக்கு புகழாரம் சூட்டினார்.

Comments