சுபாங் உடல் ஆரோக்கிய முகாமில் டாக்டர் சுப்ரா!

சுபாங் உடல் ஆரோக்கிய முகாமில் டாக்டர் சுப்ரா!

Nov 13, 2017
சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் ம இ கா மீண்டும் போட்டியிடும் என்றும் அத்தொகுதியில் போட்டியிட ம இ கா தகுதியுள்ள பல வேட்பாளர்களைக் கொண்டிருப்பதாகவும் ம இ கா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

நேற்று, ஞாயிற்றுக்கிழமை (12 நவம்பர் 2017) சிலாங்கூர், கோத்தா டாமான்சாராவில் உடல் ஆரோக்கியம் தொடர்பான முகாமை (Kem Nak Sihat) தொடக்கி வைத்தப்போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
கடந்தப் பொதுத் தேர்தலில் சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணியின் சார்பில் ம இ காவின் பிரகாஷ் ராவ் போட்டியிட்டு, பிகேஆர் கட்சியின் சிவராசாவிடம் தோல்விக் கண்டார். இதற்கு முன்னர், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ம இ காவின் சார்பில் போட்டியிட்ட டத்தோ முருகேசனும் பிகேஆர் கட்சியின்  சிவராசாவிடம் தோல்விக் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் ஆரோக்கியம் குறித்து பேசிய அமைச்சர், மலேசியர்களில் பலர் இன்னும் முழுமையான மருத்துவப் பரிசோசனை செய்து கொள்ளாமல் உள்ளனர். இதன் காரணமாகவே பலர் நோயின் தன்மை அதிகரித்த நிலையில் மருத்துவமனைக்கு வரும் போது பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே சுகாதார அமைச்சு இதுபோன்ற மருத்துவ முகாம்களை நடத்துவதாக டாக்டர் சுப்ரா தெளிவுப்படுத்தினார்.
இன்றைய நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளோடு, பொது மக்களும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

சுபாங் உடல் ஆரோக்கிய முகாமில் டாக்டர் சுப்ரா!

Comments