2 லட்சம் கார்த்திகை தீபங்கள்! விளக்கேற்ற பொதுமக்கள் திரண்டு வரலாம்! டத்தோ சுரேஷ் அழைப்பு          குணாளன் மணியம்

ரவாங், நவ.30-
        ரவாங் கம்போங் தெரெந்தாங் தம்பஹான் ஆலய திருப்பணிக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் நடத்தப்படும் 2 லட்ச கார்த்திகை தீபங்கள் ஏற்றுவதற்கு பொதுமக்கள், தொண்டூழியர்கள் அழைக்கப்படுவதாக தீபம் கிரியேஷன்ஸ் சங்கத்தின் நிர்வாக மன்ற உறுப்பினர் டத்தோ சுரேஷ் தெரிவித்தார்.
         இந்த 2 லட்ச தீபங்கள் ஏற்றுவதற்கு சுமார் 500 பேர் தேவைப்படுகின்றனர். கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் டிசம்பர் 1ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு ரவாங் சன் யோக் சீனப்பள்ளிக்கும் வர வேண்டும் என்று டத்தோ சுரேஷ் சொன்னார்ர.
          தீபம் ஏற்றுபவர்களுக்கு சங்கத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.  அதேவேளையில் மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் சிலாங்கூர் தீபம் கிரியேஷன்ஸ் ஏற்பாட்டில் 2 லட்ச கார்த்திகை தீபம் ஏற்றும் வரலாற்றுப்பூர்வ வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வற்றாத ஆதரவைத் தர வேண்டும். ஆகையால், அனைவரும் திரண்டு வரும்படி டத்தோ சுரேஷ் வலியுறுத்தினார். தொடர்புக்கு- Dato Suresh  - 019-283 7655.
Chandran- 012-320 5349

Comments