*மலேசிய கலை உலகம் ஏற்பாட்டில் 'ஆடவரலாம்' கிராமிய நடன இறுதிச் சுற்றுப் போட்டி 2017*

*மலேசிய கலை உலகம் ஏற்பாட்டில் 'ஆடவரலாம்' கிராமிய நடன இறுதிச் சுற்றுப் போட்டி 2017*


கோலாலம்பூர், டிச.8-
       இன்றைய இளம்  தலைமுறைனரிடையே கிராமிய நடனக் கலையைக் கொண்டு சேர்க்கும் விதத்தில் மலேசிய கலை உலகம் இரண்டாவது முறையாக "ஆடவரலாம்" கிராமிய நடனப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
      இதன் இறுதிச் சுற்றுப் போட்டி எதிர்வரும் டிச.24ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு தலைநகர் மியூசியம் நெகாராவில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் மொத்தம் 6 குழுக்கள் தங்களின் கிராமிய  நடன திறமையை வெளிப்படுத்தவுள்ளனர். கடந்த மாதம் நடந்த தேர்வு சுற்றின் மூலம் இந்த 6 குழுக்களும் தேர்வு செய்யப்பட்டன. இறுதிச் சுற்றில் ஒவ்வொரு குழுவும் இரண்டு நடனங்களை படைக்க வேண்டும். வெற்றிப் பெறும் குழுவுக்கு  3்ஆயிரம் வெள்ளியும் கேடயமும் வழங்கப்படும். இரண்டாம் பரிசாக  2 ஆயிரம் வெள்ளியும் மூன்றாம் பரிசாக ஆயிரம் வெள்ளியும்  ஆறுதல் பரிசாக தலா 500 வெள்ளி  3 குழுக்களுக்கு வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு கார்டுகளுக்கு எஸ்.பி.பிரபாவை 012-6261489 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Comments