நாடு தழுவிய நிலையில் "ஆசான்"
#AASAAN#
#ஆசான்#
நாடு தழுவிய நிலையில் "ஆசான்"
திரையரங்குகளில் நவம்பர் 30 முதல் "ஆசான்"

      குணாளன் மணியம்

கோலாலம்பூர், நவ.29-
          மலேசிய மண்வாசனை சாதனையை நமது தயாரிப்பாளர்கள் உள்ளூர் திரைப்படங்கள் வழி புலப்படுத்தி வருகின்றனர்.
          மலேசியத் திரைப்படத் தயாரிப்பில் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாத நிலையில் ஒவ்வொரு படத்திலும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் திறனையும் உழைப்பையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் அண்மையில் "ஆசான்" திரைப்படத்தை சிறப்புக் காட்சியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
           தந்தை-மகள் உறவை மையக் கருவாக கொண்டு படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக படம் திரையேறும் முன் அறிவிப்பாளர்கள் தெரிவித்தனர்.
          தாயை இழந்த தன் மகளோடு தனித்து வாழும் ஒரு தந்தை எதிர்நோக்கும் ஒரு போராட்டமே "ஆசான்". இப்படத்தை  பார்ப்பவர்களுக்கு தந்தையாக வரும் மதுசூதனன் தனது முன்னாள் மனைவியோடு விவாகரத்துக்கு நீதிமன்றம் செல்வதாகவே தெரியும். ஆனால், பிற்பாதி படத்தை பார்த்த பிறகுதான் படத்தின் கதையே வேறு என்று தெரிகிறது. அப்போதுதான் இதுதான் கதை என்று புலப்படுகிறது. "ஆசான்" படத்திற்குள் பல படிப்பிணை கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் மதுவுக்கு அடிமையாவதால் விளையும் தீமைகள், "கட்டட அமைப்பால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்து", "மனிதர்களுக்கு உதவும் கணக்கியல் துறை" என்று சில படிப்பிணை கதைகள் பின்னப்பட்டுள்ளன. எனினும் தன் மகளுக்காக மதுசூதனன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி கதை நகர்கிறது. தன் மகளுக்காக தந்தை மதுசூதனன் என்ன தியாகம் செய்கிறார்? மகளுக்கு என்ன நேர்ந்தது? கட்டிடம் பொது மக்களுக்கு எப்படி ஆபத்தானது? மது அருந்தியதால் நடந்தது என்ன? இந்த கேள்விகளுக்கான விடைகளுக்கு நவம்பர் 30ஆம் தேதி ஆசான் திரைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இப்படத்தில் நடித்துள்ள ஹரிதாஸ் நடிப்பை சொல்லவும் வேண்டுமா என்ன?
      கடந்த 2001ஆம் ஆண்டில் காஜாங்கில் ஒரு மேடையில் நடனக்கலைஞராக பார்த்த ஹரிதாஸை நான் அப்போது வேலை செய்த மலேசிய நண்பன்  பத்திரிகையில் ஒரு பக்கத்திற்கு கட்டுரை எழுதி மலேசிய கலை உலகிற்கு அறிமுகம் செய்தேன். அன்று தொடங்கி படிப்படியாக உயர்ந்து இன்று ஒரு நாயகனாக வலம் வந்து கொண்டுருக்கிறார்.   
         ஹரிதாஸிற்கு நடிப்பு என்பது இயல்பான ஒன்று. ஒரு அறிமுகமில்லாத சிறந்த நடனக்கலைஞராக  வலம் வந்து கொண்டிருந்த ஹரிதாஸ் இன்று ஒரு சிறந்த நடிகராக இருப்பது அவரை கலைத்துறைக்கு அறிமுகப்படுத்திய எனக்கு பெருமையாக உள்ளது.
          "ஆசான்" திரைப்படத்தில் நடித்த மற்றொரு ஹீரோ சசிஅபாஸ். எனக்கு நல்ல நண்பர். சசிஅபாஸ் கலைத்துறையில் ஈடுபட்ட காலத்தில் இருந்து எனக்குத் தெரியும். இவரும் சிறந்த கலைஞர். இந்த படத்தில் ஒரு கோபக்காரராக வரும் சசி நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஹரியின் மனைவியாக நடித்தவருக்கு வசனம் குறைவு என்றாலும் நடிப்பில் மிளிர்கிறார். மேலும் சீலன் மனோகரன், ஹரியின் மகள் பேபி லிஷாலி குமார், சசிதரன் கே.ராஜூ, சுகிதா சிவகுமார், லோகாஷினி,நிலா, கே.நிலா, பூஷ்பா நாராயணன், உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் அருமை.
          "ஆசான்" திரைப்பட இயக்குநர் புவனேந்திரன், தயாரிப்பாளர் டத்தோ ராமசாமி, இசையமைப்பாளர் ஷித்திஸ், இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும்  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
"ஆசான்"
 மலேசியர்கள் அனைவரும் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும்

Comments