தமிழ்ப்பள்ளிகளை தமிழர்கள்தான் காப்பாற்ற வேண்டும்!      மு.வ.கலைமணி

பினாங்கு, நவ.30-   
       தமிழ்ப் பள்ளிகளின் எதிர்க்கால வாழ்வாதார நிலைமையை மனதிற்கொண்டு அடுத்த வருடம் முதல்  தமிழ்ப் பள்ளிகளில் நம் பிள்ளைகளை சேர்க்காது போனால் இனி நம் தமிழ்ப் பள்ளிகளை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று பினாங்கு நாளை நமதே நற்பணி மன்றத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
     தமிழ்ப் பள்ளி இந்நாட்டில் தோன்றி 200 வருட வளர்ச்சியை இன்று நாம் காண்கிறோம், மகிழ்கிறோம்.
     வரும் சந்ததிகள் அடுத்து வரும் 50 வருட கால வளர்ச்சியை காணாமலெயே போய்விடுவர் என்ற அச்சம் இப்போது நிலவுகிறது.
வரும் ஆண்டுகளில் நம் தமிழர்கள் தமிழ்ப் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப வேண்டும். நம் தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து வாழ வேண்டும்.
மொழி வளராது போனால்,  தாய் மொழிப் பள்ளி வாழாதுப் போனால் தமிழன் இந்நாட்டில் வாழ்ந்த சுவடே இல்லாமல் போய்விடும் என பினாங்கு மாநில நாளை நமதே நற்பணி மன்றத்தினர் எச்சரித்தனர்.
    அடுத்த ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமென்பதே நாளை நமதே நற்பணி மன்றத்தின் தலையாய  வேண்டுகோளாகும் என அம்மன்றத்தின் தலைவர் சூ.இராமலிங்கம், துணைத்தலைவர் கோ.சுப்ராயன், செயலாளர் வ.கலைமணி, பொருளாளர் க.சேகர்,  பிரச்சாரப் பகுதி தலைவர் மு.ராஜசேகரன் ஆகியோர் கூட்டாக அறிக்கையொன்றில் தெரிவித்தனர்.
      தமிழ்ப் பற்றுள்ளவர்கள் என்ற வரிசையில் நாங்கள் எல்லோரும் எங்கள் பிள்ளைகளை மட்டுமல்ல பேரப் பிள்ளைகளையும்  தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பி வைத்தப் பிறகே இப்பிரச்சாரத்தில் இறங்கி வழி நடத்தி வருகின்றோம்.
அதுப்போல் மேடைகளில் தமிழ் தமிழ் என்று முழங்குபவர்கள் முதலில் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புங்கள்.
அடுத்து ம.இ.கா தலைவர்கள் தங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்ப தவற வேண்டாம் என கேட்டுக் கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
      இதனிடையே, அரசியலில் புதிய முகங்களான எதிர்க் கட்சித்
தலைவர்கள்  மேடைகளில் மழலைத் தமிழில் திக்கி பேசுவது போதும், உங்கள் பிள்ளைகள், பேரப் பிள்ளகளாவது தாய் மொழியை கற்க செய்யுங்கள். இல்லையேல் மொழியறியாத தலைவர்கள் எனவும்  தமிழ் துரோகிகள் எனவும் தமிழர்களால் ஒதுக்கி வைக்கப் படுவர்.
இது தமிழன் எனும் போர்வையில் வாழும் எல்லா டமிழர்களுக்கும் தான் என மன்றத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்

Comments