பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மெண்ட் நிலப்பிரச்சிகைக்கு சட்டமன்ற உறுப்பினர் எப்போது தீர்வு காணப் போகிறார்?

பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மெண்ட் நிலப்பிரச்சிகைக்கு சட்டமன்ற உறுப்பினர் எப்போது தீர்வு காணப் போகிறார்?

பாலமுருகன்

பத்துகேவ்ஸ், டிச.11-
          பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மெண்ட் நிலப்பிரச்சினைக்கு சட்டமன்ற உறுப்பினர் ஹிமிருடின் எப்போது தீர்வு காணப் போகிறார் என்று கோம்பாக் மஇகா தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவர் கோபிராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
          இந்தியன் செட்டில்மெண்ட் கிராம மக்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ள போதிலும் நிலம் மக்களுக்கு பிரித்து கொடுக்கப்படவில்லை. ஒருவருக்கு வழங்கப்பட்ட நிலத்தில் வேறு குடும்பம் குடியிருந்து வருகிறது. இதனால் அசல் நில உரிமையாளர்கள் வீடு கட்ட முடியவில்லை என்று அவர தெரிவித்தார்.
          கடந்த 2008இல் இங்கு போட்டியிட்ட  டத்தோ டி.மோகன் தாம் வெற்றி பெற்றால் நிலத்தை முறையாக பிரித்து உரியவர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தார். எனினும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஹமிருடின் இத்தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் இன்றுவரை இந்தியன் செட்டில்மெண்ட் நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்வரவில்லை என்று கோபிராஜ் சொன்னார்.
           சிலாங்கூர் மாநிலம் எதிர்க்கட்சி வசம் உள்ளது. பத்துமலை இந்தியன் செட்டில்மெண்ட் நிலம் தொடர்பான அதிகாரம் அவர்களிடம் இருந்த போதும் ஹிருடின் ஒன்றும் செய்யவில்லை.
       கடந்த 13ஆவது பொதுத் தேர்தலிலும் ஹமிருடின் வெற்றி பெற்றார். ஆனால் , இந்திய மக்களுக்கு என்ன செய்தார்? இந்தியன் செட்டில்மெண்ட் நிலப்பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம். அந்த நிலத்தை பிரித்து உரியவர்களுக்கு வழங்கிருந்தால் இந்நேரம் நில உரிமையாளர்கள் வீடு கட்டியிருப்பார்கள். அந்த நிலம் பட்டா ஒருவருக்கும்  குடியிருப்பவர் வேறு ஒருவராகவும் இருப்பதால் உண்மையான நில உரிமையாளர்கள் பரிதவித்து வருகிறார்கள். ஆனால், இன்றுவரை ஹமிருடின் அதற்கு தீர்வு காணவில்லை.
           நாட்டின் பொதுத்தேர்தல் நெருங்கி விட்டது. ஹமிருடின் நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண்கிறேன் என்ற இன்னொரு பொய் சொல்லி ஓட்டு கேட்பார். ஆகையால் வட்டார மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கோபிராஜ் வலியுறுத்தினார்.

Comments