ஜொகூர் இந்தியர்கள் மஇகாவிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும்! டத்தோ அசோஜன் வலியுறுத்தல்

ஜொகூர் இந்தியர்கள் மஇகாவிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும்!
டத்தோ அசோஜன் வலியுறுத்தல்


        ஜொகூர், டிச.3
 ஜொகூர் இந்தியர்கள் சிறந்த எதிர்காலத்திற்கு மஇகாவிற்கும்  தேசிய முன்னனிக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்று மாநில மஇகா தொடர்பு குழுத் தலைவர் டத்தோ அசோஜன் வலியுறுத்தியுள்ளார்.
          ஜொகூர் மாநில இந்தியர்களின் நலனில் மஇகாவிற்கும் தேசிய முன்னனிக்கும் மிகுந்த அக்கறை இருக்கிறது. இதனால் இந்திய வியூக வரைவுத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிமுகம் செய்துள்ளார். அதேவேளையில் மாநில மந்திரி பெசார் காலிட் நோர்டின் சுல்தானா ரோஹாயா அறவாரியத்தின் வழி  2018 பட்ஜெட்டில் மாநில 80 லட்சம் வெள்ளியை இந்தியர்களுக்காக ஒதுக்கியுள்ளது. இதன்வழி  கல்வி, பொருளாதாரம், சமூகவியல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண அத்தொகை உதவும் என்று டத்தோ அசோஜன் தெரிவித்தார்.
           ஜொகூர் மாநில சுல்தான் அவர்களும் இந்தியர்கள் மீது பற்று வைத்துள்ளார். இந்தியர்கள் எல்லா நிலைகளிலும் மேம்பாடு காண வேண்டும் என்று சுல்தான் விரும்புகின்றார். ஆகையால், ஜொகூர் வாழ் இந்தியர்கள் ம இ காவிற்கும் தேசிய முன்னனிக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்று டத்தோ அசோஜன் கேட்டுக் கொண்டார்.

Comments