பினாங்கு மாநில போலீஸ் தலைவராக டத்தோ தெய்வீகன் நியமனம்!
இந்திய சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!
செனட்டர் டத்தோ டி.மோகன் புகழாரம்!

குணாளன் மணியம்

கோலாலம்பூர்,  டிச.14-
         பினாங்கு மாநில காவல் துறை தலைவராக டத்தோ ஆ.தெய்வீகன் நியமிகப்பட்டுள்ளதானது இந்திய சமுதாயத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும் என்று மஇகா தேசிய உதவித் தலைவர்  செனட்டர் டத்தோ டி.மோகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
          இந்திய சமுதாயத்திற்கு குறிப்பாக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து செயல்பட்டு வரும் டத்தோ தெய்வீகனுக்கு கிடைத்த பதவி உயர்வு சமுதாயத்திற்கு கிடைத்த பெருமையாகும்  என்று தேசம் வலைத்தலத்திற்கு வழங்கிய சிறப்பு சந்திப்பில் டி.மோகன் தெரிவித்தார்.
         ஒரு தமிழர் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தமிழர் உயர் பதவியில் அமர வைக்கப பட்டுள்ளார். இந்த உயர் பதவி நியமனமானது டத்தோ தெய்வீகன் மீது அரச மலேசிய போலீஸ் துறை வைத்துள்ள அழமான நம்பிக்கையை காட்டுகிறது. இது ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்திற்கு கிடைத்த ஒரு பெரிய அங்கீகாரமாகும். இதனால்  இந்திய சமுதாயம் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளது.
இதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கும் அரச மலேசிய காவல் துறை தலைவர் டான்ஸ்ரீ  பூசி ஹருண் ஆகியோருக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்று செனட்டர் டத்தோ டி.மோகன் குறிப்பிட்டார்.
       டத்தோ ஆ.தெய்வீகன் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் நாள்  பினாங்கு மாநில காவல் துறை தலைவராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments