நாட்டில் அதிகமான இந்திய இளம் தொழில்முனைவர்களை உருவாக்க மஇகா பாடுபடும்! டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் வலியுறுத்தல்!

நாட்டில் அதிகமான இந்திய இளம்  தொழில்முனைவர்களை உருவாக்க மஇகா பாடுபடும்!
டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் வலியுறுத்தல்!

     குணாளன் மணியம்கோலாலம்பூர், டிச.3-

           நாட்டில் அதிகமான இந்திய இளம் தொழில் முனைவர்களை உருவாக்க மஇகா பாடுபடும் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் கூறினார்.
       இந்தியர்கள் குறிப்பாக இளைஞர்கள் வரத்தகத் துறையில் தங்களை அதிகளவில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் புதிய வரைவுத் திட்டத்தை கடந்த ஜூலை அறிமுகம் செய்து வைத்தார்.
 அதேநேரத்தில் தெக்கூன் மூலம் 27 கோடி வெள்ளி 15,500 இந்திய வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அமானா இத்தியார் மூலம் 11 கோடி வெள்ளி 10 ஆயிரம் தனிநபர்களுக்கும் 10 கோடி வெள்ளி 1,200 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக டாக்டர் சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
          இந்தியர்களின் நலனில் பிரதமர் தனிகவனம் செலுத்தி மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த வேளையில் வர்த்தகத்தில் சாதனை புரித்து பெர்டானா விருதுகளை பெற்றுள்ள இளம் தொழில்முனைவர்களுக்கு டாக்டர் சுப்பிரமணியம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
           இந்த நிகழ்ச்சியில் முன்னதாக உரையாற்றிய மலேசிய இந்திய தொழில்முனைவர்  சங்கத்தின் தலைவர் மதுமாரிமுத்து இந்திய தொழில்முனைவர்களுக்கு ம இ கா மூலம் பல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
         இந்த பெர்டானா விருதளிப்பு விழாவில் வர்த்தகத் துறையைச் சார்ந்த 33 இளம் தொழில் முனைவர்களுக்கு பல்வேறு துறைகளில் சாதனை விருதுகள் வழங்கப்பட்டன.
        இதில் கெடா, சுங்கைப்பட்டாணி சாய் ஆசியா பில்டர்ஸ் நிறுவனத்தின் வெங்கடேஷ் நாச்சிமணி இரண்டு சாதனை விருதுகளை தட்டிச்சென்றார்.
          கடந்த 17 ஆண்டுகளாக நான் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறேன்  கடந்த 5 ஆண்டுகளாக வடிவமைப்பு துறையில் இருந்து வருகிறேன். நாடு தழுவிய நிலையில் வடிவமைப்பு தொழில் மேற்கொண்டு வருகிறேன். இவருக்கு கட்டட வடிவமைப்புத் துறையில் சாதனை விருதும் 2017 இளம் தொழி்ல் முனைவர் பிரிவில் இரண்டாவது நிலையில் சாதனை விருதும் வழங்கப்பட்டது.
        அதேநேரத்தில் சித்தியவான் எஸ்.பி. சத்ரியா கான்ஸ்ரக்‌ஷன்ஸ், இஞ்ஜினியரிங் நிறுவனத்தைச் சேர்ந்த சத்திய பாலா பாலகிருஷ்ணன் கான்ஸ்ரக்‌ஷன்ஸ் பிரிவில் சாதனை விருது பெற்றுள்ளார்.
       என் தந்தை மூலமாக இத்துறைக்கு வந்தேன்.  கடந்த 6 ஆண்டுகளில் கிடைத்த அங்கீகாரம் இந்த விருதாகும் என்று சத்திய பாலா தெரிவித்தார்.
          இந்த விருதளிப்பில் சப்தம்ஸ்விஷன் நிறுவனத்தின் பிரான்சிஸ் சில்வனுக்கு    தொலைக்காட்சி, திரைப்பட தயாரிப்பு பிரிவில் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

குணாளன் மணியம்
தோற்றுநர்-தலைமை ஆசிரியர்
தேசம் வலைத்தள ஊடகம்
                                           
                                             

Comments