தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்! -பெர்டானா சாதனை விருது பெற்ற வெங்கடேஷ் கூறுகிறார்

தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!
-பெர்டானா சாதனை விருது பெற்ற வெங்கடேஷ் கூறுகிறார்

செய்தி-படங்கள்: குணாளன் மணியம்


 கோலாலம்பூர், டிச.7-
           வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு மேற்கொள்ளப்படும் எந்த திட்டமும் கண்டிப்பாக வெற்றியைத் தேடித்தரும் என்று பெர்டானா சாதனை விருது பெற்ற வெங்கடேஷ் கூறினார்.
         நம்மவர்கள் பெரும்பாலும் ஒரு துறையில் நீண்ட நாள் ஈடுபடுவதில்லை. ஒருமுறை தோல்வியடைந்து விட்டால் மனம் சோர்ந்து விடுகிறார்கள். அதன்பிறகு வேறு துறையை நாடிச் செல்கிறார்கள். இதை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். நாம் எப்போம் முன்வைத்த காலை பின்வைக்கக் கூடாது. நம்மால் முடியும் என்ற சிந்தனையோடும் தன்னப்பிக்கையோடும் செய்யப்படும் காரியங்கள் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் வெங்கடேஷ் தெரிவித்தார்.
         நான் வர்த்தகத் துறையில் கடந்த 17 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன். இந்த  கட்டுமான, வடிவமைப்புத் துறையில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு  பூஜ்யத்தில்தான் வர்த்தகத்தைத் தொடங்கினேன். நான் கொண்டிருந்த தன்னம்பிக்கை, உழைப்பு எனக்கு வெற்றியைத் தேடித் தந்தது.
          நான் நாடு முழுவதும் கட்டுமான வடிவமைப்பை மேற்கொண்டு வருகிறேன். இதில் குறிப்பாக ஸ்டார்பாக்ஸ் உணவக வடிவமைப்பை மேற்கொண்டு வருகிறேன். எதிர்காலத்தில் வர்த்தகத் துறையில் மேம்பாட்டு திட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாகவும் பலகை பொருட்கள் தளவாடங்கள் தயாரிப்புத் துறையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக வெங்கடேஷ் குறிப்பிட்டார்.
         வெங்கடேஷ் நிறுவனத்தில் 12 முழுநேர பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் 40 துணை குத்தகை நிறுவனங்கள் இவரது நிறுவனத்தின் குத்தகை வேலைகளை செய்து வருகின்றனர்.
    இந்த மலேசிய இந்திய தொழில்முனைவர்  சங்கத்தின் ஏற்பாட்டில் இந்திய இளம்  தொழில்முனைவர்களுக்காக நடத்தப்பட்ட
பெர்டானா விருதளிப்பு விழாவில் கெடா, சுங்கைப்பட்டாணி சாய் ஆசியா பில்டர்ஸ் நிறுவனத்தின் வெங்கடேஷ் நாச்சிமணி இரண்டு சாதனை விருதுகளை தட்டிச்சென்றார்.
          வெங்கடேஷ் கட்டுமானப் பிரிவில் சாதனை விருதும் 2017 சிறந்த இளம் தொழில் முனைவர் பிரிவில் இரண்டாவது நிலையில் விருது பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.Comments