இந்திய இளம் தொழில் முனைவர்களுக்காக ஐந்து பரிந்துரைகள்!

இந்திய இளம் தொழில் முனைவர்களுக்காக ஐந்து பரிந்துரைகள்!
-மதுரைவீரன் மாரிமுத்து

குணாளன் மணியம்


கோலாலம்பூர், டிச.4-
     மலேசிய இந்திய இளம் தொழில்முனைவர்களின் நலனுக்காக கூட்டுறவுக் கழகம் முன்வைக்கும் ஐந்து கோரிக்கைகளுக்கு அமைச்சரவை உறுப்பினர், செடிக் நிர்வாக தலைவர் என்ற நிலையில் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் உதவ வேண்டும் என்று மலேசிய இளம் தொழில் முனைவர் கூட்டுறவு கழகத்தின் தலைவர் மதுரைவீரன் மாரிமுத்து வலியுறுத்தியுள்ளார்.
         மலேசியா பல  இளம் இந்திய தொழில் முனைவர்களைக் கொண்டுள்ளது. இதில் மலேசிய இந்திய இளம் தொழில் முனைவர் கூட்டுறவுக் கழகத்தின் சார்பில் பல இந்திய இளம் தொழில் முனைவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இளம் தொழில் முனைவர்களுக்கு தரம், திறனாற்றல் கட்டுப்பாடு இல்லாமல் உதவிநிதி வழங்க டத்தோஸ்ரீ டாக்டர் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற தனது முதல் கோரிக்கையை மதுரைவீரன் முன்வைத்தார்.
         இந்திய இளம் தொழில் முனைவர்களுக்கு அரசாங்கத்தின் கோடிக்கணக்கான கொள்முதல் திட்டங்களில் வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். இந்திய இளம் தொழில் முனைவர்களுக்கு அதனை செய்யும் திறனாற்றல் இருந்த போதிலும் தலைவர்களின் ஆதரவு இல்லாமல் அது கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால் டாக்டர் சுப்பிரமணியம் சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுகளில் இருக்கும் வாய்ப்புகளை பெற்றுத்தர வேண்டும் என்று மதுரைவீரன் கேட்டுக் கொண்டார்.
            அரசாங்கத்தில் இருக்கும் குத்தகை வாய்ப்புகள் இந்திய இளம் தொழில் முனைவர்களுக்கு வழங்க டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் பரிந்துரை செய்ய வேண்டும்.
         இந்திய இளம் தொழில் முனிவர்களின் நிறுவனங்களை பங்கு சந்தையில் இடம்பெற பரிந்துரைக்க வேண்டும். இதற்காக தெராஜு போன்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.இதன்வழி அவர்களின் பொருளாதார சூழலை மையமாகக் கொண்டு பங்கு சந்தையில் இடம்பெறச் பரிந்துரை செய்யப்பட வேண்டும்.மேலும் அரசாங்க தொடர்புடைய ஜிஎல்சி நிறுவனங்களில் தகுதிபெற்ற இந்திய தொழில் முனைவர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க வேண்டும். நான் இரண்டு மஇகா தலைவர்களுக்கு அத்தகைய தகுதியான தொழில்முனைவர்களை அடையாளம் கண்டு பரிந்துரை செய்திருக்கிறேன். ஆகையால், டாக்டர் சுப்பிரமணியம் ஜிஎல்சி நிறுவனங்களில் இந்திய இளம் தொழில் முனைவர்களை நியமிக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அவர்களுக்கு மதுரைவீரன் மாரித்து ஐந்தாவது கோரிக்கையாக முன்வைத்தார்.

குணாளன் மணியம்
தோற்றுநர்-தலைமை ஆசிரியர்
தேசம் வலைத்தள ஊடகம்
                                           
                         


Comments