புக்கிட் செலாம்பாவ், லூனாஸ் சட்டமன்றங்களை மீட்க கெடா மாநில மஇகா பாடுபடும்!
செனட்டர் டத்தோ ஆனந்தன் தகவல்!

குணாளன் மணியம்


கோலாலம்பூர், டிச.20-
             மஇகா வசமிருந்த புக்கிட் செலாம்பாவ், லூனாஸ் தொகுதிகளை மீட்டெடுக்க கெடா மாநில மஇகா கடுமையாக உழைக்கும் என்று அதன் துணைத் தலைவர் செனட்டர் ஆனந்தன் கூறினார்.
         கடந்த 2008, 2013 ஆகிய இரண்டு பொதுதத் தேர்தல்களில் மஇகா தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் எதிர்வரும் 13ஆவது பொதுத் தேர்தலில் புக்கிட் செலாம்பாவ் தொகுதியை மீட்க மாநில மஇகா கடுமையான பிரச்சாரங்களை நடத்தும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு சந்திப்பில் டத்தோ அசோஜன் அவ்வாறு தெரிவித்தார்.
         புக்கிட் செலாம்பாவ் சட்டமன்றத்தில் 70 விழுக்காட்டு இந்தியர்கள் தேசிய முன்னனிக்கும் மஇகாவிற்கும் ஆதரவு வழங்கி வருகிறார்கள் என்பதால் அச்சட்டமன்றத்தில் மஇகாவின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதாக டத்தோ ஆனந்தன் சொன்னார்.
         நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில மஇகா இழந்த தொகுதிகளை மீட்க அனைத்து மஇகா தலைவர்களும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அறைகூவல் விடுத்திருந்தார். தலைவரின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் கெடா மாநில மஇகா தலைவர் டத்தோ ஜஸ்பால் சிங் தலைமையில் மாநில மஇகா கடுமையாக உழைக்கும் என்று டத்தோ ஆனந்தன் குறிப்பிட்டார்.

Comments