பத்துமலையில் முருகனுக்கு பன்னீர் அபிஷேகம்!
பக்தர்களுக்கு டான்ஸ்ரீ நடராஜா அழைப்பு!

செய்தியாளர் :   குணாளன் மணியம்

பத்துமலை, டிச.25-
       பத்துமலையில் முருகனுக்கு பன்னீர் அபிஷேகம் நடைபெறவுள்ளதால்
பக்தர்கள் திரளாகக் கலந்து கொள்ளும்படி ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா  அழைப்பு விடுத்துள்ளார்.
          பத்துமலை திருத்தலத்தில்  குடிகொண்டுள்ள 140 அடி முருகன் சிலைக்கும் ஜனவரி முதல் நாள் 2018 புத்தாண்டு அன்று காலை 10 மணிக்கு பன்னீர் அபிஷேகம் நடைபெறும். இந்த நிகழ்வு 2ஆம் ஆண்டாக நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
ஆகையால், இந்த விழாவில் பக்தர்கள் அனைவரும் திரளாக க் கலந்து கொள்ளும்படி டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

Comments