உழைப்பு ஒன்று மட்டுமே உயர்வு தரும்!
-டத்தோ எம்.சரவணன்

          கு.ஹரிஷ்


திரெங்கானு, டிச.16-
        'வாழ்க்கையில் உழைப்பு ஒன்று மட்டுமே உயர்வு தரும். கல்விச் செல்வத்தை பல்கலைக்கழக மாணவர்களாகிய நீங்கள் பெற்று விட்டீர்கள். அடுத்ததாக, வாழ்க்கையில் நீங்கள் உயர வேண்டும். அதற்கு திட்டமிடுங்கள். செயல்திட்டத்தை வகுத்துக் கொண்டு கடுமையாக உழையுங்கள்' என்று  இளைஞர், விளையாட்டுத் துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் வலியுறுத்தியுள்ளார்.
    உழைப்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். வெற்றிப் பெற குறுக்கு வழி ஏதும் கிடையாது.

உயர்ந்த குறிக்கோள் ஒன்றை வரையறுத்துக் கொண்டு பொருளாதார துறையில் உயர உழையுங்கள். ஆயிரம் தடைக் கற்கள் வந்து விழுந்தாலும் வெற்றி மீது நம்பிக்கை வையுங்கள். உழைப்பே உயர்வு தரும்.
வெற்றிப் பெறுவீர்கள் என்று  திரெங்கானு யுஎம்டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற *காணு கொளரவர்கள் கிண்ண தமிழ் சொற்போர்* நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றுகையில்  டத்தோ எம்.சரவணன் தெரிவித்தார்.

Comments