ம.இ.கா பத்து கவான் தொகுதியினர் இருவருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கினர்!

மு.வ.கலைமணி

புக்கிட் தெங்கா,  டிச.19-
       பக்கவாத நோயினால் பாதிப்புக்குள்ளான இரு சமூக சேவையாளர்களுக்கு ம.இ.கா பத்து கவான் தொகுதியினர் அவர்களது இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்ததுடன் சக்கர நாற்காலிகளை வழங்கினர்.
       தாமான் மர்கிசாவைச் சேர்ந்த ஓதுவார் என்றழைக்கப்படும் முனியாண்டி அவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
சமய ஈடுபாட்டில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்ட அவர், பல ஆலயங்களில் தேவாரம், பஜனை, சமய வகுப்புகளை நடத்தி வந்தவராவார்.
அவரின் அரிய சமய சேவையின் வழி அவருக்கு ஓதுவார் எனும் விருது இந்து சங்கத்தால் வழங்கப்பட்டது.
       தாமான் புக்கிட் மிஞ்ஞாக் எனும் குடியிருப்பில் நீண்ட காலமாக வசித்து வரும் கோபால்  அண்மையில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்ததை அறிந்த புக்கிட் மிஞ்ஞாக்  ம.இ.கா கிளைத் தலைவர் க.சேகர் அவர்களின்  சீரிய முயற்ச்சியின் பயனாக  இந்த ஏற்பாட்டினை தாம் மேற்கொண்டதாக ம.இ.கா பத்து காவான் தொகுதித் தலைவர் சூ.இராமலிங்கம் தெரிவித்தார்.
      இதனிடையே, இந்த இரு சக்கர நாற்காலிகளை பெற பேருதவி வழங்கிய ம.இ.கா பினாங்கு மாநில துணைத் தலைவர் மு.ஞானசேகரன் அவர்களுக்கு தமது தொகுதி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

Comments