மஇகா பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியை மீண்டும் கைப்பற்றும்! டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் சூளுரை! செய்தியாளர் : குணாளன் மணியம்

மஇகா பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியை மீண்டும் கைப்பற்றும்!
டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் சூளுரை!

செய்தியாளர் :
  குணாளன் மணியம்

பத்துகேவ்ஸ், ஜன.17-
        நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியை கைப்பற்றும் என்று அதற் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சூளுரைத்துள்ளார்.
        கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் மஇகா பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியில் தோல்வி கண்டுள்ள நிலையில் இத்தொகுதியில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் மக்களுக்கு்என்ன செய்தார் எனும் கேள்வி எழுந்துள்ளது.
ஆகையால், இம்முறை பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மஇகா கண்டிப்பாக வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பத்துகேவ்ஸ், கெனிசன் பிரதர்ஸ் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற  சிலாங்கூர் மாநில மஇகாவின் பொங்கல் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய போது டாக்டர் சுப்பிரமணியம் அவ்வாறு சொன்னார்.
         பத்துகேவ்ஸ் வட்டார இந்தியர்களுக்கு தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியும். இத்தொகுதியில் எதிர்கட்சி வேட்பாளர் என்ன சேவை செய்து கொண்டிருக்கிறார் என்பதும் மக்களுக்குத் தெரியும். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆகையால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ம இ கா வெற்றி பெறுவது உறுதி. அதேநேரத்தில் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியையும் தேசிய முன்னனி வெல்லும் என்றும் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Comments