பிறை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் இந்து அறப்பணி வாரியத்தால் இழுத்து மூடப்பட்டது!

பிறை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம்  இந்து அறப்பணி வாரியத்தால்  இழுத்து மூடப்பட்டது!

மு.வ.கலைமணி.

பிறை, ஜன.10-
      பிறை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி இழுத்து மூடப்பட்டது. ஆலயப் பதிவு ரத்தாகியதால் மறு பதிவுக்கு விண்ணப்பித்திருந்த வேளையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அவ்வாலயத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.
ஆலயத்தை பொதுமக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தை   அவ்வாலய முன்னால் நிர்வாகம் மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியை தழுவியதால்,
தொடர் முயற்சியாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் நீதிமன்ற வழங்கிய தீர்ப்பில் ஆலயத்தை  சம்பந்தப்பட்ட முன்னால் நிர்வாகத்திடமே ஒப்படைக்க பணிக்கப்பட்டது.
இதனிடையே, இன்று மதியம் இந்து அறப்பணி வாரியத்தினர் ஆலயத்தில் எல்லா வாயில் கதவுகளையும் புதிய பூட்டுகள் கொண்டு பூட்டி விட்டு சென்று விட்டனர்.
இதனையறிந்த நிர்வாகத்தினர்கள், பக்தர்கள்,  பொதுமக்கள் யாவரும் ஆலயத்தின் முன்னே திரண்டனர்.
இதனையடுத்து பொது மக்கள் துணையுடன் காவல் துறையில் புகார் செய்யப்பட்டது.
மாலை வேளை பூஜைக்கு முன்னே கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை காவல் துறையிடம் முறையிட்டும் பலனில்லாததால் வந்திருந்த மக்கள் கொதிப்படைந்தனர்.
ஆலயம் இருண்டு கிடப்பதை கண்டு பொதுமக்கள் அதிகளவில் திரள  தொடங்கினர்.
காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இறுதியாக இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆலய சாவி கிராம மேம்பாடு பாதுகாப்பு  உறுப்பினர் ஒருவரால் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பின்னர் ஆலய கதவுகள்  திறக்கப்பட்டப் பிறகு மக்கள் பக்தியில் திளைத்து விநாயகருக்கு ஜே என கோசம் போட்டு மகிழ்ந்தனர்.

Comments