நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் இந்திய இளைஞர்கள் தங்கள் சக்தியை வெளிப்படுத்த வேண்டும்! மஇகா வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும்! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வேண்டுகோள்

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் இந்திய இளைஞர்கள் தங்கள் சக்தியை வெளிப்படுத்த வேண்டும்!
மஇகா வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும்!
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வேண்டுகோள்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 29-
          இளைஞர் சக்தி மகத்தான சக்தி. இந்திய இளைஞர்கள் ஆற்றல்மிக்கவர்கள். நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் இளைஞர்கள் மஇகா வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும் என்று நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
          இளைஞர்கள் பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்தால் கண்டிப்பாக அதற்கான பிரதிபலன் கிடைக்கும்.
அந்த வகையில் இந்திய இளைஞர்கள் தங்கள் சக்தியை ஒன்று திரட்டி ம இ கா வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும் என்று கூட்டரசு பிரதேச நட்புறவு இயக்கத் தொடக்க விழாவில் அவ்வாறு கூறினார்.
அவரது உரையை அவரின் பத்திரிகை செயலாளர் சிவசுப்பிரமணியம் வாசித்தார்.
           இளைஞர் சத்தி சாதாரண ஒன்றல்ல. அது மகத்தானது. நான் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்த போது சந்தித்த சவால்கள் பல. ஆனால், அதற்கான பலன் கிடைத்துள்ளது.
          இளைஞர் என்ற நிலையை நான் உட்பட பலர் தாண்டியிருந்தாலும் இன்னமும் இளைஞர் என்ற துடிப்போடு செய்யப்பட்டு வருகிறோம். நீங்களும் அதேதுடிப்போடு செயல்பட்டு நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா இழந்த தொகுதிகளை மீட்க முழுமையாக களமிறங்க வேண்டும் என்று மஇகா தேசிய உதவித் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்தினார்.
         இந்த நட்புறவு இயக்கம் நாடு தழுவிய நிலையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை பினாங்கு, ஜொகூர் மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நட்புறவு இயக்கம் மற்ற மாநிலங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் இவை படிப்படியாக  அவை அறிமுகம் செய்யப்படும். இந்த இயக்கத்தில் முன்னாள் இளைஞர்கள் களமிறக்கப்படுகின்றனர். அதேநேரத்தில் இந்நாள் இளைஞர்களும் இணைந்து பணியாற்றலாம். நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா வெற்றி பெறுவதற்கு இந்த நட்புறவு இயக்கம் ஆணிவேராக இருந்து செயல்படும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.
          இந்நிகழ்ச்சியில் மலேசிய நட்புறவு இயக்கத்தின் தலைவர் ரமேஷ் சுப்பிரமணியம், துணைத் தலைவர் நந்தகுமார், கூட்டரசு பிரதேச தலைவர் விக்னேஷ்வரன் ஆகியோருடன் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

Comments