புதிய இளம் பாடகர்களை அடையாளம் காணும் நோக்கத்தில் பைம் சூப்பர்ஸ்டார் 2018! மலேசிய இந்திய கலைஞர்கள் அமைப்பு 6 மாநிலங்களில் நடத்துகிறது! ஜொகூரில் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் தலைவர் எமர்ஜென்சி தகவல்

புதிய இளம் பாடகர்களை அடையாளம் காணும் நோக்கத்தில் பைம் சூப்பர்ஸ்டார் 2018!
மலேசிய இந்திய கலைஞர்கள் அமைப்பு 6 மாநிலங்களில் நடத்துகிறது!
ஜொகூரில் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் தலைவர் எமர்ஜென்சி தகவல்

கோலாலம்பூர், மார்ச் 17-
          நாடு தழுவிய நிலையில் இருக்கும் புதிய, இளம் பாடகர்களை அடையாளம் காணும் நோக்கத்தில் மலேசிய இந்தியக் கலைஞர்கள் அமைப்பு நாடு தழுவிய நிலையில் பைம் சூப்பர்ஸ்டார் 2018 பாடகர்கள் தேடல் நிகழ்ச்சியை நடத்தி வருவதாக அதன் தலைவர் விஜே எமர்ஜென்சி கூறினார்.
         இதன் முதல் கட்ட பாடகர்கள் தேர்வு ஜொகூரில் இன்று காலை 11.00 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பங்கேற்ற போட்டியாளர்கள் தங்கள் திறமையை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினர்.
          இந்த பைம் சூப்பர்ஸ்டார் 2018 போட்டியாளர்கள் தேர்வு நாளை மார்ச் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி தொடங்கி மாலை 5.00 மணிவரையில் பினாங்கிலும் கோலாலம்பூர் ஜெம்ஸ் காராவோகே மையத்திலும் நடைபெறும் என்று விஜே எமர்ஜென்சி தெரிவித்தார்.
           இந்த போட்டி 15 வயதுக்கு மேல்பட்டவர்கள், 15 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் என்று இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
இப்போட்டியில் மாநில ரீதியாக வெற்றி பெறும் 15 வயதுக்கு மேற்பட்ட வெற்றியாளருக்கு முதல் பரிசாக ஆயிரம் வெள்ளியும் 500 வெள்ளியும் மூன்றாவது பரிசாக 300 வெள்ளியும் வழங்கப்படும். 15 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு முதல் பரிசாக 500 வெள்ளியும் இரண்டாவது பரிசாக 300 வெள்ளியும் மூன்றாவது பரிசாக 200 வெள்ளியும் வழங்கப்படும் என்று விஜே எமர்ஜென்சி சொன்னார்.
       பைம் சூப்பர்ஸ்டார் 2018 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று ஏப்ரல் மாதம் நடைபெறும். இதன் 15 வயதுக்கு மேற்பட்ட வெற்றியாளருக்கு 2000 ஆயிரம் வெள்ளியும் இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு ஆயிரம் வெள்ளியும் மூன்றாம் நிலை வெற்றியாளருக்கு 700 வெள்ளியும் நான்காம் நிலை வெற்றியாளருக்கு 500 வெள்ளியும் ஐந்தாம் நிலை வெற்றியாளருக்கு 300 வெள்ளியும் வழங்கப்படும். அதேநேரத்தில் 15 வயதுக்கு கீழ்ப்பட்ட வெற்றியாளர்களுக்கு முறையே 1,000, 700, 500, 300, 200 என்று ஐந்துநிலைப் பரிசுகள் வழங்கப்படும் என்றார் விஜே.
          இந்த பாடும் திறன் போட்டி நிகழ்ச்சி இலைமறைக்காயாக இருக்கும் கலைஞர்களுக்கு  ஒரு பாலமாக அமையும். நாடு தழுவிய நிலையில் உள்ள கலை ஆர்வலர்கள் இப்போட்டியில் பங்கேற்று ஒரு பாடகராக வலம் வரலாம் என்று செய்தியாளர் சந்திப்பில் செனட்டர் டத்தோ டி.மோகன் குறிப்பிட்டார்.
   தொடர்புக்கு -012-3880587

Comments