அஸ்ட்ரோ விண்மீன் ஏற்பாட்டில் நாளை மார்ச் 23 பட்டிமன்றம்! கே.பாக்யராஜ் தலைமையில் நடைபெறும்!

அஸ்ட்ரோ விண்மீன் ஏற்பாட்டில் நாளை மார்ச் 23 பட்டிமன்றம்!
கே.பாக்யராஜ் தலைமையில் நடைபெறும்!

கோலாலம்பூர், மார்ச் 22-
       பட்டிமன்றம், அரட்டை அரங்கம் போன்ற பேச்சாளர்களை மேடையேற்றும் நிகழ்ச்சிகளுக்கு நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
     அந்த வகையில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்த திண்டுக்கல் ஐ.லியோனி  தலைமையில் இசை மற்றும் நகைச்சுவை கலந்த பாட்டுமன்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாளை மார்ச் 23-ஆம் தேதி  தமிழ்த் திரையுலகில் நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட கே.பாக்யராஜ் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.
“தாம்பத்ய குதூகலத்தில் போனஸ் இன்பம் எதில்?” என்ற தலைப்பை மையப்படுத்தி இந்தச் சிறப்பு பட்டிமன்றம் இரவு 7.30 மணிக்கு செக்க்ஷன் 16, ஷா ஆலமில் அமைந்துள்ள தி.எஸ்.ஆர் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
     கே.பாக்யராஜ் தலைமையில் நடக்கவிருக்கும் இப்பட்டிமன்றத்தில் பிக் பாஸ் ஆர்த்தி, வையாபுரி, ரமேஷ் கண்ணா, சின்னி ஜெயந்த், பாண்டு மற்றும் அறந்தாங்கி நிஷா கலந்துக் கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். 
      இந்நிகழ்ச்சிக்கு நுழைவு முற்றிலும் இலவசமாகும். உங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ள மறவாதீர்கள்.

Comments