"அடேங்கப்பா செம காமடி" மார்ச் 25 ஞாயிற்றுக்கிழமை காலை மஇகா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில் நடைபெறும்! ஜாங்கிரி புரோடாக்‌ஷன் இயக்குநர் நந்தினி தகவல்

"அடேங்கப்பா செம காமடி" 
மார்ச் 25 ஞாயிற்றுக்கிழமை காலை மஇகா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில் நடைபெறும்!
ஜாங்கிரி புரோடாக்‌ஷன்  இயக்குநர் நந்தினி தகவல்

 ரேவதி குணாளன்

கோலாலம்பூர், மார்ச் 24
        நகைச்சுவை கலைஞர்களை உருவாக்கும் நோக்கத்தில் "அடேங்கப்பா செம காமடி" நகைச்சுவை நிகழ்ச்சியை நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் மஇகா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக ஜாங்கிரி புரோடாக்‌ஷன் இயக்குநர் நந்தினி கணேசன் கூறினார்.
         மலேசியாவில் நகைச்சுவை திறன் கொண்டவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்திக் கொள்ளும் வகையில் ஜாங்கிரி புரோடாக்‌ஷன்-மலேசிய இந்திய கலைஞர்களின் கூட்டமைப்பு இணைந்து நாடு தழுவிய நிலையில் "அடேங்கப்பா செம காமடி" நிகழ்ச்சிக்கான நேர்முகத் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த வாரம் ஜொகூரில் இந்த நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த வாரம் மார்ச் 25ஆம் நாள் காலை 10.00 தொடங்கி நடைபெறவிருப்பதாக   தேசம் வலைத்தளத்திடம் நந்தினி தெரிவித்தார்.
      மற்றவர்களை சிரிக்க வைக்கும் திறன் கொண்டவர்களுக்காக இந்நிகழ்ச்சியில் 6 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். கோலாலம்பூர், ஜொகூர்  பினாங்கு, ஈப்போ, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஜொகூர் நடந்து முடிந்துள்ளது.
        இதில் 6 வயதுக்கு மேற்பட்ட ஆண்-பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
இதன் பங்கேற்பாளர்கள் குழுவாகவோ, தனியாகவோ வரலாம். இது முழுக்க முழுக்க காமடி நிகழ்ச்சி என்பதால் "ஸ்டேன்டார்ப் காமடிகள் வரவேற்கப்படுகின்றன. இந்த நேர்முகத் தேர்வில் ( ஆடிஷன்) பங்கேற்க விரும்புகிறவரகள் கீழ்க்காணும் தொடர்பு எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு - 016-4478743, 016-9845658, 017-2696366.

Comments