கோல்பீல்ட் தமிழ்ப்பள்ளி் நிதி,நில விவகாரம்! அஸ்மின் அலி 48 மணிநேரத்தில் கோரிக்கை கடிதத்திற்கு பதில் சொல்ல வேண்டும்! மஇகா புனிதன் வலியுறுத்தல்

கோல்பீல்ட் தமிழ்ப்பள்ளி் நிதி,நில விவகாரம்!
அஸ்மின் அலி 48 மணிநேரத்தில் கோரிக்கை கடிதத்திற்கு பதில் சொல்ல வேண்டும்! 
மஇகா புனிதன் வலியுறுத்தல்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 15-
         கோல்பீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம், நிதி விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி 48 மணி நேரத்திற்குள் பதில் சொல்ல வேண்டும் என்று மஇகா இளைஞர். பகுதி தகவல் பிரிவுத் தலைவர் புனிதன் பரமசிவன் வலியுறுத்தியுள்ளார்.
        கோல்பீல்ட் தமிழ்ப்பள்ளிக்கு கடந்த 2012இல் அப்போதைய மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் 18 வகுப்பறைகள், நூலகம், அறிவியல் கூடம், சிற்றுண்டி சாலை, கணினி அறை, ஆசிரியர் அறை, 800 பேர் அமரக்கூடிய மண்டபம் என்று 40 லட்சம் வெள்ளி செலவில் இப்பள்ளியின் கட்டடத்தை கட்டவிருந்தது.
ஆனால் அதில் சில குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதால் அதற்கு மந்திரி பெசார் அஸ்மின் அலி 48 மணிநேரத்திற்குள் பதில் சொல்ல வேண்டும் என்று சிலாங்கூர் ஷா ஆலமில் உள்ள மந்திரி பெசார் அலுவலகத்தில் கோரிக்கை கடிதம் வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
         கோல்பீல்ட் தோட்ட மக்களின் பிள்ளைகள் தங்கி படிக்கும் வகையில் 7.68 ஏக்கர் நிலப்பரப்பில் 7 லட்சம் வெள்ளி செலவில் தங்குவிடுதி ஒன்றையும் தமிழ்ப்பள்ளியையும் கட்ட சிலாங்கூர் மாநில அரசு வாக்குறுதி வழங்கியிருந்தது.  ஆனால் அதே நிதி ஒதுக்கீட்டில் 6 வகுப்பறைகள், ஆசிரியர் அறை, நூலகம், சிற்றுண்டிச் சாலை மட்டுமே கட்டப்படுவதால் சில குளறுபடிகள் நிகழ்ந்துள்ளது குறித்து அஸ்மின் அலி பதில் சொல்ல வேண்டும் என்று புனிதன் கேட்டுக் கொண்டார்.
   இப்பள்ளிக்கு ஏற்கெனவே அறிவித்த 18 வகுப்பறைகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் என்னவாயிற்று? இந்த பள்ளி கட்டட புதிய திட்டம் குறித்து பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் தெரிவிக்காதது ஏன்? கோல்பீல்ட் தோட்ட பட்டாளிப் பிள்ளைகளுக்காக தங்குவிடுதி கட்ட வழங்கப்பட்ட 7.68 ஏக்கர் நிலம் என்னவானது? கோல்பீல்ட் தோட்டத்தில் கட்டப்படவிருந்த தங்கு விடுதி மிண்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி அருகில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட காரணம் என்ன?
         இந்த கேள்விகளுக்கு அஸ்மின் அலி 48 மணிநேரத்திற்குள் பதில் சொல்ல வேண்டும் என்று புனிதன் வலியுறுத்தினார்.

Comments