டான்ஸ் ராகா டான்ஸ் 6,000 வெள்ளியைத் தட்டிச் செல்லும் வாய்ப்பு!

டான்ஸ் ராகா டான்ஸ் 6,000 வெள்ளியைத் தட்டிச் செல்லும் வாய்ப்பு!கோலாலம்பூர், மார்ச் 28-
     ராகா வானொலி நிலையத்தின் ஏற்பாட்டில் உயர்கல்வி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான டான்ஸ் ராகா டான்ஸ் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
        இப்போட்டியில்  6,000 வெள்ளியைத் தட்டிச் செல்லும் அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. ராகா மெர்சல், விவேகம், தானா சேர்ந்த கூட்டம், வேலைக்காரன் மற்றும் வனமகன் திரைப்படங்களிலிருந்து ஏதோனும் ஒரு பாடலைத் தேர்வு செய்து நடனமாட வேண்டும்.
     டான்ஸ் ராகா டான்ஸ் போட்டியில் பங்கேற்க விரும்புகிறவர்கள் கீழ்க்காணும்  விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
1) ஏற்பாடு குழுவினர் வழங்கிய திரைப்படங்களில் ஏதேனும் ஒரு பாடலைத் தேர்வு செய்து போட்டியாளர்கள் நடனமாட வேண்டும். ஒரு குழுவில் 6 பேர் மட்டுமே இருக்க வேண்டும்.
2) அந்நடனத்தின் காணொளியை 1 நிமிடங்களுக்குப் பதிவு செய்து  இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
3) அக்காணொளியைப் பதிவேற்றம் செய்யும் பொழுது #DanceRaagaDance எனும் சொல்லை ஹேஸ்டேக் செய்ய வேண்டும்.
4) நியமிக்கப்பட்ட நடுவர் குழு அவற்றுள் சிறந்த 6 குழுக்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
5) தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களை ஏற்பாடு குழுவினர் இன்ஸ்டாகிராம் வாயிலாக தொடர்பு கொண்டு மாபெரும் இறுதிச் சுற்றுக்கான பாடலை வழங்குவார்கள்.
6) மாபெரும் இறுதிச் சுற்றில் 6 குழுக்களும் நடுவர்கள் முன்னிலையில் நடனமாட வேண்டும்.
7) யார் வெற்றியாளர் என்பது  மாபெரும் இறுதிச் சுற்று நடந்து முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு அதாவது ஏப்ரல் 16-ஆம் தேதி ராகாவின் ஸ்டுடியோவிலிருந்து முகநூல் நேரடி ஒளிப்பரப்பில் அறிவிக்கப்படும்.
8) முதல் நிலை வெற்றியாளருக்கு 6,000 ரிங்கிட் ரொக்கம் வழங்கப்படும்.
மேல் விவரங்களுக்கு raaga.my அகப்பக்கத்தை நாடுங்கள்.

Comments