மலேசிய தல அஜித் நற்பணி மன்றத்தின் புட்சால் போட்டி! ஹை கிளப் அணி வெ.700ஐ தட்டிச் சென்றது

மலேசிய தல அஜித் நற்பணி மன்றத்தின் புட்சால் போட்டி!
ஹை கிளப் அணி வெ.700ஐ தட்டிச் சென்றது!

கோலாலம்பூர், மார்ச் 28-
    மலேசிய தல அஜித் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இத்தகைய புட்சால் விளையாட்டுகள்
தொடர்ந்து நடத்தப்படும் என்று அதன் தலைவர் தேவேந்திரன் தெரிவித்தார்.
        இந்த  2ஆவது ஆண்டாக நடைபெற்ற புட்சால் போட்டியில் ஹை கிளப் அணி முதல் பரிசான 700 வெள்ளியைத் தட்டிச்  சென்றதாக அவர் சொன்னார்.
     இதில் வெற்றியாளர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
    இரண்டாம் நிலையில் வெற்றி பெற்ற வொண்டர் சிரிம்ஸ் அணிக்கு 500 வெள்ளியும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதோடு மூன்றாம் நிலையில் வெற்றிப்பெற்ற இன்பினிட்டி அணிக்கு 250 வெள்ளியும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நான்காம் நிலையில் வெற்றிப்பெற்ற எம்.ஆர்.எஸ்.எஃப் அணிக்கு பரிசு கூடையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதில் 20 அணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட
பிரபல நடிகரும் ஸ்டூடியோ 9 நிறுவனத்தின் உரிமையாளருமான ஆர்.கே.சுரேஷ்
வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Comments