ஈஜோக் சட்டமன்ற வேட்பாளர் யார்? கோல சிலாங்கூர் தொகுதி ஆதரவு இல்லை! 70 கிளைத் தலைவர்கள் பார்த்திபனை புறக்கணித்தனர்! டாக்டர் சுப்பிரமணியம் புதிய வேட்பாளரை நிறுத்துவாரா?

ஈஜோக் சட்டமன்ற  வேட்பாளர் யார்? 
கோல சிலாங்கூர் தொகுதி ஆதரவு இல்லை!
70 கிளைத் தலைவர்கள் 
பார்த்திபனை புறக்கணித்தனர்!
டாக்டர் சுப்பிரமணியம் புதிய வேட்பாளரை நிறுத்துவாரா?

செய்தியாளர் : குணாளன் மணியம்

ஈஜோக் மார்ச் 15-
     மஇகா ஈஜோக் சட்டமன்றத் தொகுதியை மீட்க டாக்டர் சுப்பிரமணியம் புதிய வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று ஈஜோக் மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.     

        ஈஜோக்கில் இரண்டு முறை தோல்வி கண்ட பார்த்திபன் தகுதியான வேட்பாளர் இல்லை என்பதால் கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் புதிய வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று   ஈஜோக் மக்கள் தேசம் வலைத்தளத்திடம்  கருத்துத் தெரிவித்துள்ளனர்.
         ஈஜோக் தொகுதியில் மஇகா சார்பில் பார்த்திபனே மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று ஆருடங்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் தேசியத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம்  இன்று மாலை கோல சிலாங்கூர் கிளைத் தலைவர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்தவிருப்பதாகவும் இதன்வழி ஒரு முடிவுக்கு வரலாம் என்று முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
         பார்த்திபனை கோல சிலாங்கூர் தொகுதியில் 70 கிளைத் தலைவர்கள் நிராகரித்துள்ளதாக அறியப்படுகிறது. தொகுதியின் ஆதரவு இல்லை என்றும் தெரிகிறது. இதன்காரணமாகவே பார்த்திபன் தனித்து செயல்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொகுதி, கிளையின் ஆதரவு இல்லாத இரண்டு முறை தோல்வி கண்ட பார்த்திபன் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் மஇகா தோல்வி உறுதி என்று பலரும் கூறுகின்றனர்.
         இந்நிலையில் டாக்டர் சுப்பிரமணியம் பார்த்திபன் பெயரையே வேட்பாளராக அறிவிக்கவிருப்பதாகவும் இதனை கிளைத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத சில கிளைத் தலைவர்கள் தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தனர்.
            பார்த்திபன் கட்சித் தலைமையிடம் அம்னோ, மசீசவின் ஆதரவு இருப்பதாகவும் கூறியிருப்பதாகவும் தெரிகிறது. ஆனால், உண்மையில் பார்த்திபனை மலாய், சீன வாக்காளர்கள் நிராகரித்துள்ள தகவல் ஈஜோக்கில் தேசம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
          கட்சித் தலைமை நிராகரிக்கப்பட்ட, இரு முறை தோல்வி கண்ட ஒருவருக்கு ஏன் வாய்ப்பு தர எண்ணம் கொண்டிருக்க வேண்டும்?
          இத்தொகுதியில் வேறு புதிய வேட்பாளர் இல்லையா? மக்கள் எண்ணங்களையும் எதுர்பார்ப்புகளையும் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? டாக்டர் சுப்பிரமணியம் இதனை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்று ஈஜோக் மக்கள் கேட்டுக் கொண்டனர்.
     இதஉ தொடர்பில் ஆய்வு செய்ய தேசம் நிருபர் குழு ஈஜோக் தொகுதியில் களமிறங்கியது. ஈஜோக் தொகுதிக்கு உங்கள் ஆதரவு யாருக்கு என்று பலரிடம் வினவிய போது புதிய  வேட்பாளர் வேண்டும் என்று 80 விழுக்காடு மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.   மஇகா சார்பில் புதிய முகம் நிறுத்தப்பட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக  இருக்கும் என்று மக்கள் கூறினர்.
           பார்த்திபனை ஏன் விரும்பவில்லை என்று கேட்டதற்கு கடந்த காலங்களில் அவரது மக்கள் சேசை குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதேநேரத்தில் 2007 இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  பார்த்திபன் மக்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறி விட்டார் என்று புகார் தெரிவித்தனர்.
         தேசம் வலைத்தளம் சில மலாய்க்கார நண்பர்களிடமும் பார்த்திபன் நிலை குறித்து  கேள்வி எழுப்பியது. அவர்களும் புது முகத்தை நிறுத்தினால் ம இ காவிற்கு வாக்களிப்போம். இல்லா விட்டால் எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிப்போம் என்று வெளிப்படையாகக் கூறிச் சென்றனர்.
            கோல சிலாங்கூர் மஇகா தொகுதியும் பார்த்திபனுக்கு ஆதரவு வழங்கவில்லை என்று தெரிகிறது. அத்தொகுதித் பார்த்திபன் வேண்டாம் எனும் முடிவில் இருப்பதாகவும் இதுகுறித்து கட்சித் தலைமையிடம் தெரிவித்து விட்டதாகவும் தகவல் கசிந்துள்ளது. ஈஜோக் சட்டமன்றத் தொகுதியில்  தேசம் வலைத்தளம் மேற்கொண்ட ஆய்வில் பலரும் பார்த்திபனை விரும்பவில்லை என்று தெளிவாகியுள்ளதால் கட்சித் தலைமை புதிய வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
        கோலசிலாங்கூர் நாடாமன்றத் தொகுதியில் ஈஜோக் சட்டமன்றம் மஇகாவிற்கு முக்கியமான இடமாகும். எனினும் ஈஜோக் மக்கள் குறிப்பாக இந்தியர்கள் பார்த்திபனை விரும்பவில்லை. ஈஜோக்கில் மஇகா வெற்றி பெற வேண்டுமானால்  இளைஞர்கள் போட்டியிட வேண்டும். ஈஜோக் தொகுதிக்கு புதுமுகம் அவசியம் என்பது மக்கள் கருத்து. பார்த்திபன் போட்டியிட்டால் மஇகா வெற்றி பெறுவது கடினம் என்று மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.

Comments