பிரகாஷ்ராவ் சரஸ்வதி தமிழ்ப்பள்ளிக்கு 7,500 வெள்ளி மதிப்புள்ள மேசை, நாற்காலி வழங்கினார்!


  1. பிரகாஷ்ராவ் சரஸ்வதி தமிழ்ப்பள்ளிக்கு 7,500 வெள்ளி மதிப்புள்ள மேசை, நாற்காலி வழங்கினார்!


சுங்கை பூலோ,மார்ச் 14-
         மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள சுபாங் நாடாளுமன்றத் தொகுதி இந்தியர் நல இயக்குநர் பிரகாஷ்ராவ்  சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளிக்கு 7,500 வெள்ளி மதிப்புள்ள 50 மேசை, நாற்காலி வழங்கி மாணவர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
           இந்தப் பள்ளிக்கு என்ன தேவை இருக்கிறது என்று பள்ளி தலைமையாசிரியர் திருமதி யாசோதாவிடம் கேட்ட போது அவர் மேசை, நாற்காலி தேவையை கூறியிருந்தார். அதன்படி 7,500 வெள்ளி மதிப்புள்ள 50 மேசை, 50 நாற்காலிகளை உடனடியாக வாங்கித் தந்துள்ளார்.
         அதேநேரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தேவை குறித்தும் ஆராய்ந்து வரும் பிரகாஷ்ராவ் கடந்தாண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் 8ஏ பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வாங்கித் தந்துள்ளார்.
        இப்படி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சேவைக்கு முக்கியத்துவம் வழங்கும் பிரகாஷ்ராவ் அவர்களை சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகள் அமைப்பாளர் டேனியல்,  தலைமையாசிரியர் திருமதி யாசோதா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என்று பலரும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments