கோல்பீல்ட் தமிழ்ப்பள்ளி் நிலம், நிதியில் எந்த மூடுமந்திரமும் இல்லை! நிகழ்காலத்திற்கு ஏற்ற செலவில் கட்டப்பட்டு வருகிறது! குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்! குணராஜ் எச்சரிக்கை

கோல்பீல்ட் தமிழ்ப்பள்ளி் நிலம், நிதியில் எந்த மூடுமந்திரமும் இல்லை!
நிகழ்காலத்திற்கு ஏற்ற செலவில் கட்டப்பட்டு வருகிறது!
குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்!
குணராஜ் எச்சரிக்கை

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 11-
         கோல்பீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம், நிதியில் மூடுமந்திரம் எதுவும் இல்லை. இதில் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்  என்று  கெஅடிலான் கட்சியின் செலாயாங் தொகுதித் துணைத் தலைவர் குணராஜ்  மஇகா புனிதனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
         கோல்பீல்ட் தமிழ்ப்பள்ளி 6 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2012இல் 18 வகுப்பறைகள் உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 6 ஆண்டுகளுக்கு முன்பு  40 லட்சம் வெள்ளியில் 18 வகுப்பறைகள் கொண்ட பள்ளியாக பல வசதிகளுடன் கட்டத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் ஜேகேஆர் வெளியிட்ட குத்தகையில் 40 லட்சம் வெள்ளியில் 6 வகுப்பறைகள், ஆசிரியர் அறை, சிற்றுண்டிச் சாலை உள்ளிட்ட சில வசதிகளுடன் மட்டுமே கட்ட முடியும் என்று குத்தகையாளர்கள் குத்தகை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் குணராஜ் தெரிவித்தார்.
        மஇகாவின் இலக்கு  குறை கண்டுபிடிப்பதாக இருக்குமேயானால் எங்களாலும் செராண்டா தமிழ்ப்பள்ளி, எஃபிங்கம் தமிழ்ப்பள்ளி குறித்து கேள்வி எழுப்ப முடியும். ஆனால், நாங்கள் நமது பிள்ளைகள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறோம். புனிதன் ஏதோ ஒரு பெரிய உண்மையைக் கண்டுபிடித்தது போல் பிதற்றிக் கொள்கிறார்.
           கடந்த 2012இல் டான்ஸ்ரீ காலிட் 40 லட்சம் வெள்ளி செலவில் பள்ளியை கட்டத் திட்டமிட்டது உண்மைதான். 18 வகுப்பறைகள், ஆசிரியர் அறை, கணினி அறை, அறிவியல் கூடம், சிற்றுண்டிச் சாலை, 800 பேர் அமரக்கூடிய மண்டபம் என்று கட்டத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அஸ்மின் அலி மந்திரி பெசாராக வந்த பிறகு அத்திட்டத்தை ஜேகேஆரிடம் ஒப்படைத்தார். அதில் 40 லட்சம் வெள்ளியில் 20 லட்சம் வெள்ளியை மாநில அரசாங்கமும் மேலும் 20 லட்சம் வெள்ளியை மேம்பாட்டு நிறுவனமான கே.எல் கெப்போங் நிறுவனமும் வழங்கியிருந்தது. இந்நிலையில் தற்போதைய நிதி சூழல், விலைவாசி அதிகரிப்பு, மாணவர் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களுக்காக 6 வகுப்பறைகளுடன் மட்டுமே பள்ளியை கட்ட முடியும் என்று குத்தகை நிறுவனங்கள் கூறியதால் அத்திட்டம் தொடங்கப்பட்டு கோல்பீல்ட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தில் இருப்பதாக அவர் சொன்னார்.
         இந்தத் திட்டத்தில் தங்குவிடுதி கட்டப்படுவதாக இருந்த து. ஆனால், மாணவர் பற்றாக்குறை காரணமாக அது மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளிக்கு அருகில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான திட்டமாகும். இதில் 200 மாணவர்கள் தங்கி படிப்பார்கள். இந்நிலையில் கோல்பீல்ட் தோட்டத்தில் கட்டத் திட்டமிடப்பட்ட தங்குவிடுதி தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் கண்டிப்பாக கட்டப்படும் என்று குணராஜ் உறுதியளித்த குணராஜ் 7.68 நிலத்தில் 4 ஏக்கரில் கோல்பீல்ட் தமிழ்ப்பள்ளி கட்டப்பட்டு வருவதாகவும் மீதமுள்ள நிலம் அப்படி இருப்பதாகவும் குணராஜ் குறிப்பிட்டார்.
        இந்த விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ், சேவியர் ஜெயகுமார் ஆகிய மூவரும் 72 மணி நேரத்திற்குள் பதில் சொல்ல வேண்டும் என்று மஇகா இளைஞர். பகுதி தகவல் பிரிவுத் தலைவர் புனிதன் பரமசிவன் கூறியுள்ளது அதிகபிரசங்கிதனமானது என்றார் குணராஜ்
      கோல்பீல்ட் தமிழ்ப்பள்ளிக்கு கடந்த 2012இல் அப்போதைய மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் 18 வகுப்பறைகள், நூலகம், அறிவியல் கூடம், சிற்றுண்டி சாலை, கணினி அறை, ஆசிரியர் அறை, 800 பேர் அமரக்கூடிய மண்டபம் என்று 40 லட்சம் வெள்ளி செலவில் இப்பள்ளியின் கட்டடம் கட்டப்படவிருந்தது என்றும் கோல்பீல்ட் தோட்ட மக்களின் பிள்ளைகள் தங்கி படிக்கும் வகையில் 7.68 ஏக்கர் நிலப்பரப்பில் 7 லட்சம் வெள்ளி செலவில் தங்குவிடுதி ஒன்றும் கட்டத் திட்டமிடப்பட்டிருந்தது என்றும் ஆனால் அதே நிதி ஒதுக்கீட்டில் 6 வகுப்பறைகள், ஆசிரியர் அறை, நூலகம், சிற்றுண்டிச் சாலை மட்டுமே கட்டப்படுவது ஏன் என்று மஇகா இளைஞர் பகுதி தகவல் பிரிவு தலைவர்  புனிதன் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments