தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நலனுக்கு தொடர்ந்து பாடுபடுவேன்! சுபாங் நாடாளுமன்ற இந்தியர் நல இயக்குநர் பிரகாஷ்ராவ் வாக்குறுதி

 தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நலனுக்கு தொடர்ந்து பாடுபடுவேன்!
சுபாங் நாடாளுமன்ற இந்தியர் நல இயக்குநர் பிரகாஷ்ராவ் வாக்குறுதி

செய்தியாளர் :
 குணாளன் மணியம்

சுங்கை பூலோ மார்ச் 14-
          தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கி செயல்படுவேன்.
இதில் குறிப்பாக  சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபட போவதாக சுபாங் நாடாளுமன்றத் தொகுதி இந்தியர் நல இயக்குநர் பிரகாஷ்ராவ் வாக்குறுதியளித்துள்ளார்.
          தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்தாற் போல் பல வெற்றிகளைக் குவித்துள்ளனர். இதில் குறிப்பாக யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கமளிக்க மடிக்கணிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.
இதில் கடந்தாண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 8ஏவுக்கு 700 வெள்ளியும் 7ஏ எடுத்த மாணவர்களுக்கு 600 வெள்ளியும் 6ஏ எடுத்த மாணவர்களுக்கு 500 வெள்ளியும் மார்ச் 30ஆம் நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு மாணவர்  கருத்தரங்கில் வழங்கவிருப்பதாக சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பெற்றோர், ஆசிரியர் சங்க்க் கூட்டத்தில் உரையாற்றுகையில் பிரகாஷ்ராவ் தெரிவித்தார்.
       நமக்கு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளக்கி எதிர்காலத்திற்கு நல்லதொரு அடித்தளம் அமைக்க வேண்டும் என்பதுதான் இலக்கு. அந்த வகையில் புக்கிட் டாரா, ஆர்.ஆர்.ஐ, சரஸ்வதி, எஃபிங்கம் ஆகிய 4 தமிழ்ப்பள்ளிகளுக்கு கடந்தாண்டு 30 தலா இரண்டாயிரம் வெள்ளி மதிப்புள்ள மடிக்கணியை வழங்கினோம்.
இதில் கடந்தாண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் 8ஏ பெற்ற புக கிட் டாரா, ஆர்.ஆர்.ஐ, சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சேர்ந்த சிறந்த மாணவர்களுக்கு மார்ச் 25ஆம் நாள் வழங்கப்படும் என்று பலத்த கைத்தட்டலுக்கு மத்தியில் பிரகாஷ்ராவ் அறிவித்தார்.
    சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தமிழ்ப்பள்ளி மற்றும் மாணவர்களுக்கான உதவிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
சரஸ்வதி தமிழ்ப்பள்ளிக்கு இணை கட்டடம் ஒன்றை கட்டுவதற்கு டத்தோ ரத்தினம் ஆலோசனை கூறியிருந்தார். அம்முயற்றிக்கும் சுபாங் மஇகா தொகுதியின் சார்பில் ஒத்துழைப்பு வழங்குவோம். அதன் தலைவர் சௌந்தராஜன் வற்றாத ஆதரவை வழங்கி வருகிறார். அதேநேரத்தில் பொருளாதார ரீதியில் உதவி நல்கி வரும் மலேசியாவைச் சேர்ந்த அமெரிக்க பிரஜை புஷ்பநாதன், சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர், சரஸ்வதி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி மா.யசோதா, பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் விக்னேஷ்வரன், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பிரகாஷ்ராவ் நன்றி கூறினார்.
        இந்த்நிகழ்ச்சியில் 7,500 வெள்ளி மதிப்புள்ள 50 மேசைகள், 50  நாற்காலிகளை பிரகாஷ்ராவ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments