வாழ்க்கையில் பெண்கள் துணிச்சலோடு போராட வேண்டும்! தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்! ரத்னவள்ளி அம்மையார் வலியுறுத்தல்

வாழ்க்கையில் பெண்கள் துணிச்சலோடு போராட வேண்டும்!
தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்!
ரத்னவள்ளி அம்மையார் வலியுறுத்தல்

செய்தியாளர் :
குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 19-
          வாழ்க்கையில் பெண்கள் தன்னம்பிக்கையோடு போராடினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் கூறியுள்ளார்.
       இந்திய சமுதாயத்தில் இன்னமும் வசதி குறைந்த ஏழைகள் குறிப்பாக ஆதரவற்ற தனித்து வாழும் தாய்மார்கள் இருக்கவே செய்கிறார்கள். இவர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
இத்தகைய பெண்களுக்கு நாம் உதவ வேண்டும். வாழ்க்கையில் அவர்களை சாதனையாள்களாக உருவாக்க வேண்டும் என்று தேசம் வலைத்தலத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் மலேசியக் கலைஞர்களின் காவலர் என்று போற்றப்படும் ரத்னவள்ளி அம்மையார் தெரிவித்தார்.
        நான் என் சொந்த முயற்சியில் பல பெண்களின் வாழ்க்கையை உயர்த்தியிருக்கிறேன். என்னைப் போல மற்றவர்களும் உதவி வழங்க தயாராக இருக்க வேண்டும்.
அதேநேரத்தில் பெண்கள் குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்கள் வாழ்க்கையில் வெற்றி பெற போராட்டங்களைச் சந்திக்க வேண்டும். அந்தப் போராட்டம் அவர்களை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்லும் என்று ரத்னவள்ளி அம்மையார் கேட்டுக் கொண்டார்.
        மகளிர் மீது அதிக அக்கறையும் பரிவும் செலுத்தி வரும் ரத்னவள்ளி அம்மையார் அண்மையில் கொண்டாடப்பட்ட மகளிர் தினத்தை முன்னிட்டு மலேசிய டாக்டர் கமலஹாசன் இயக்கத்தின் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வுக்கு வருகை மேற்கொண்ட ரத்னவள்ளி அம்மையார் கேக் வெட்டி மகளிர்களுக்கு அன்பாக ஊட்டினார். அதேவேளையில் பிரிக்பீல்ட்ஸ் நூ சென்டரலுக்கு வருகை புரிந்த மகளிர்களுக்கு ரோஜா பூங்கொத்து வழங்கினார்.
         இந்த நிகழ்வை மலேசிய டாக்டர் கமலஹாசன் நற்பணி இயக்கத்தின் தலைவர் டத்தோ இந்திரா சாகர் ஏற்பாடு செய்திருந்தார்.
உலகநாயகன் கமலஹாசன் பெயரில் மலேசியாவில் நற்பணி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டத்தோ இந்திரா சாகர் தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தார்.

Comments