சுங்கை பூலோவில் இந்தியர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு! சுபாங் மஇகா நடவடிக்கையில் இறங்கும்! பிரகாஷ்ராவ் தகவல்

சுங்கை பூலோவில் இந்தியர்கள் எதிர்நோக்கும் 
அடிப்படை பிரச்சினைகளுக்கு
 தீர்வு! சுபாங் மஇகா நடவடிக்கையில் இறங்கும்!
பிரகாஷ்ராவ் தகவல்

செய்தியாளர் : ஹரிஸ்ரீனிவாஸ் குணாளன்

சுபாங், மார்ச் 23-
         சுபாங் தொகுதிக்கு உட்பட்ட சுங்கை பூலோ வட்டாரத்தில் இந்தியர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகளுக்கு சுபாங் மஇகா தொகுதித் தலைவர் சௌந்தராஜன் ஒத்துழைப்பில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுபாங் தொகுதி இந்தியர் நல இயக்குநர் பிரகாஷ்ராவ் கூறினார்.
         சுபாங் நாடாளுமன்றத் தொகுதி எதிர்க்கட்சி வசம் இருந்தாலும் இத்தொகுதி மஇகா மக்கள் சேவையை தொடர்ந்து செய்து கொண்டுதான் வருகிறது.
சுபாங் தொகுதி மஇகா தலைவர் சௌந்தராஜன் ஒத்துழைப்பில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இப்போது இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த 10 ஆண்டுகளில் இத்தொகுதி இந்தியர்களை கவனிக்கத் தவறி விட்டார் என்பது மக்கள் கருத்து.
ஆனால், மஇகா இரண்டு பொதுத் தேர்தல்களில் தோல்வி கண்டிருந்தாலும் சேவையை கைவிடவில்லை. இந்த வட்டாரத்தில் இந்திய மக்கள் எதிர்நோக்கி வரும் பல பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அப்பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு காணப்படும் என்று தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் பிரகாஷ்ராவ் சொன்னார்.
        சுபாங் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வி கண்டிருந்தாலும் மக்கள் சேவைக்கு முக்கியத்துவம் வழங்கி இன்று வரையில் செயல்பட்டு வரும் பிரகாஷ்ராவ் சுபாங், சுங்கை பூலோ என்று இந்தியர்களின் பிரச்சினையை இடைவிடாமல் கவனித்து வருகிறார். இவ்வட்டார மக்கள் எதிர்நோக்கும் பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக தீர்வு கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments