இந்திய இளைஞர்களின் மேம்பாட்டை இலக்காகக் கொண்டு மஇகா செயல்பட்டு வருகிறது! இளைஞர்கள் பார்வை மஇகா மீது திரும்பியுள்ளதால் பொதுத்தேர்தல் வெற்றியைக் கொண்டு வரும்! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தகவல்!

இந்திய இளைஞர்களின் மேம்பாட்டை இலக்காகக் கொண்டு மஇகா செயல்பட்டு வருகிறது!
இளைஞர்கள் பார்வை மஇகா மீது திரும்பியுள்ளதால்  பொதுத்தேர்தல் வெற்றியைக் கொண்டு வரும்!
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தகவல்!

குணாளன் மணியம்

பினாங்கு, மார்ச் 25-
         மஇகா இளைஞர்களின் மேம்பாட்டை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் இளைஞர்கள் வெற்றியைத் தேடித் தருவார்கள் என்று மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கூறினார்.   
       இந்தியர்களின் மேம்பாட்டிற்கு மஇகா முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது என்று மஇகா உதவித் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
         கடந்த காலங்களில் மஇகாவின் சில திட்டங்கள் வெற்றி பெறவில்லை என்பதை வைத்துக் கொண்டு போவோர் வருவொரெல்லாம் மஇகா குறித்து குறை சொல்லி வருகிறார்கள்.
ஆனால், மஇகாவின் பல திட்டங்கள் வெற்றியளித்துள்ளதை அவர்கள் மறுக்க முடியாது என்று பினாங்கு மாநில நட்புறவு இயக்கத்தின் அறிமுக விழாவில் உரையாற்றுகையில் நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் சொன்னார்.
         மஇகா சரியில்லை என்று காலம் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அன்று தொடங்கி இன்று வரையில் மக்களுக்கு அரசாங்கத்திற்கும் ஒரு பாலமாக இருந்து வருவது மஇகா மட்டுமே.
இளைஞர்கள் பார்வை மஇகா மீது திரும்பியுள்ளது. ஆகையால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய இளைஞர்கள் பாடுபட வேண்டும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.
         இந்த பினாங்கு மாநில நட்புறவு இயக்கம் மஇகாவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். இளைஞர்களுக்கு மஇகாவின் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் பினாங்கு நட்புறவு இயக்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Comments