ஆற்றல்மிக்க இளைஞர்கள் இமயத்தையும் தொட முடியும்! -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்

ஆற்றல்மிக்க இளைஞர்கள் இமயத்தையும் தொட முடியும்!
-டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் 

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 28-
          தலைமைத்துவ ஆற்றல் கொண்ட இளைஞர்கள்  இமயத்தையும் தொட முடியும்.
ஒரு  சமுதாயத்தையும் வழி நடத்த முடியும் என்று நாடாளுமன்ற மேலவைத் தலைவர்
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கூறிய்யுள்ளார்.
         நான் ஒரு இளைஞராக இருந்த வாய்ப்புகள் அதிகம் இல்லை. சொந்த முயற்சியில் வாய்ப்புகளைத் தேடி வெற்றி கண்டேன்.
ஆனால், தற்போதைய சூழல் அப்படி இல்லை. இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனை நன்கு பயன்படுத்தி எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மலேசிய தமிழ் இளைஞர் பணிமன்றப் பேரவையின் தேசிய அளவிலான தலைமைத்துவ பயிற்சியில் மஇகா உதவித் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அவ்வாறு கூறினார்.
         அரசியல், அமைப்பு, இயக்கம் என்று இளைஞர்கள் பல நிலைகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் எண்ணம் எப்போதும் முன்னேறத் துடிப்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.
இளைஞர்கள் எதிர்பார்ப்புகளை முன்வைத்து செயல்படக்கூடாது. தலைமைத்துவ ஆற்றல் இருக்குமாயின் இளைஞர்கள் கண்டிப்பாக இமயத்தை தொட முடியும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.
         இந்த மூன்று நாள் தலைமைத்துவ பயிற்சில் 250 இளைஞர்கள் பங்கேற்றனர். டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

Comments