சுபாங் மஇகா தொகுதி சார்பில் சுற்றுலா சென்ற சுபாங் மக்களுக்கு பேருந்து, வேன் சேவை! பிரகாஷ்ராவ் வழங்கி உதவினார்

சுபாங் மஇகா தொகுதி சார்பில் சுற்றுலா சென்ற சுபாங் மக்களுக்கு பேருந்து, வேன் சேவை!
பிரகாஷ்ராவ் வழங்கி உதவினார்

கோலாலம்பூர், மார்ச் 15-
   சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து கோலசிலாங்கூர், பத்தாங் பெர்ஜுந்தை ஆலயங்களுக்கு சுற்றுலா மேற்கொண்ட இந்திய மக்கள் 60 பேரின் பேருந்து, வேன் மற்றும் உணவு செலவுகளை சுபாங் நாடாளுமன்றத் தொகுதியின் இந்தியர் நல இயக்குநர் பிரகாஷ் ராவ் வழங்கியுள்ளார்.
          இவர்கள் பண்டார் பாரு சுங்கை பூலோவில் இருந்து புறப்பட்டனர். இவர்களுக்கு காலை உணவு வழங்கி, வாழ்த்துக் கூறி வழியனுப்பி வைத்தார் பிரகாஷ்ராவ்.
         சுற்றுலாவில் கலந்து கொண்ட 60 இந்திய மக்களும் உதவி வழங்கிய பிரகாஷ்ராவுக்கு நன்றி தெரிவித்தனர். சுபாங் தொகுதியில் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றி வரும் பிரகாஷ்ராவின் சேவை தொடர வேண்டும் என்றும் அவருக்கு தாங்கள் என்றும் ஆதரவு வழங்குவதாகவும் சுற்றுலாவில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

Comments