மலேசியக் கலைஞர்களின் தயாரிப்புகள் சென்னையில் திரையேற வேண்டும்! "நட்புன்னா என்னான்னு தெரியுமா" இந்திய திரைப்பட அறிமுகவிழாவில் மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் வேண்டுகோள்!

மலேசியக் கலைஞர்களின் தயாரிப்புகள் சென்னையில் திரையேற வேண்டும்!
"நட்புன்னா என்னான்னு தெரியுமா" இந்திய திரைப்பட அறிமுகவிழாவில் மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் வேண்டுகோள்!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 20-
         மலேசியக் கலைஞர்களின் படைப்புக்கள் சென்னை சினிமாவில் திரையேற வேண்டும் தென்னிந்திய சினிமா துறைக்கு மலேசியக் கலைஞர்களின் காவலராகத் திகழும் மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
           மலேசியாவில் நமது கலைஞர்கள் பல சிறப்பான படங்களை தயாரித்து வருகின்றனர். இந்த படங்கள் மலேசியாவில் மட்டுமே திரையிடப்பட்டு வருகின்றன.
இப்படங்கள் சென்னையில் திரையேற வேண்டும். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் உதவ வேண்டும் என்று மாராஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற "நட்புன்னா என்னான்னு தெரியுமா" சினிமா திரைப்படத்தின்  ஆடியோ அறிமுகவிழாவில் உரையாற்றுகையில் ரத்னவள்ளி அம்மையார் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.
           சினிமா படம் என்றால் சிறப்பாக இருக்கும் என்பது துளியளவும் சந்தேகமில்லை. அதேநேரத்தில் மலேசிய திரைப்படங்களும் சினிமா திரைப்படங்களுக்கு நிகராக மிகவும் சிறப்பாக தயாரிக்கப்படுகிறது.
இதில் "காளி முனி தரிசனம்" 33 திரைப்படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆகையால், மலேசியத் திரைப்படங்கள் சென்னையில் திரையேற தென்னிந்திய நடிகர் சங்கம் வழிவகை செய்ய வேண்டும் என்று மலேசியக் கலைஞர்களுக்கு காவலராக இருந்து வரும் ரத்னவள்ளி அம்மையார் கேட்டுக் கொண்டார்.
         இந்த நிகழ்ச்சியில் "நட்புன்னா என்னான்னு தெரியுமா" திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு கண்டது. இதனை ரத்னவள்ளி அம்மையார், லோட்டஸ் ஃபைப்ஸ்டார் உரிமையாளர் டத்தோ ரெனா துறைசிங்கம், அப்படத்தின் நாயகன்- நாயகி கவின், ரம்யா, இயக்குநர் சிவா அர்விந்த், இசையமைப்பாளர் தரன், தயாரிப்பாளர் ரவிசந்தர், இரண்டாவது நாயகன் நடிகர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments