தனித்திறன் வழி எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளுங்கள்! எஸ்.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெறாத இந்திய மாணவர்களுக்கு டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்து!

தனித்திறன் வழி எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளுங்கள்!
எஸ்.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெறாத இந்திய மாணவர்களுக்கு டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்து!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 19-
          நாடு தழுவிய நிலையில் அண்மையில் வெளிவந்த எஸ்.பி.எம் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறும் அதேவேளையில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தனித்திறன் வழி எதிர்கால வாழ்க்கைக்கு  அடித்தளம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
          நாம் பெரும்பாலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தேர்ச்சி குறித்து மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருப்போம். இது கொண்டாட வேண்டிய விஷயம்தான். ஏனெனில் நமது இந்திய மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சியின் வழி சாதனை படைத்துள்ளனர்.
        அதேநேரத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை குறித்து நாம் அதிகம் சிந்திக்க வேண்டும். தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு பல வாய்ப்புகற் கிடைக்கும். ஆனால், தேர்ச்சி பெறாத மாணவர்கள் தங்கள் எதிர்காலத்திற்கு சூழலை வைத்துதான் அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
          எஸ்.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெறாத அல்லது குறைந்த தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் தனித்திறனை அடையாளம் காண வேண்டும். ஒவ்வொரு இந்திய மாணவனும்  தங்களுக்குள் தனித்திறனை கொண்டிருப்பார்கள். அந்தத் திறனை மாணவர்கள் வெளிக்கொணர வேண்டும். இதனை வெளிக்கொணர்வதற்கு பெற்றோர்கள், நண்பர்கள், பொது இயக்கங்கள் உதவ வேண்டும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
          எஸ்.பி.எம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் காட்டிலும் சிறப்புத் தேர்ச்சி பெறாத, தோல்வி கண்ட மாணவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஆகையால், நாம் தோல்வி கண்ட இந்திய மாணவர்களின் நலனில் அக்கனை கொள்ள வேண்டும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
       அதேநேரத்தில் எஸ்.பி.எம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்..

Comments