இளைஞர்கள் ஆழப்போறான் தமிழன் பாடலுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்! புத்தாக்க சிந்தனையோடு எதிர்காலத்தை திட்டமிட வேண்டும்! பிரகாஷ்ராவ் வேண்டுகோள்!

இளைஞர்கள் ஆழப்போறான் தமிழன் பாடலுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்!
புத்தாக்க சிந்தனையோடு எதிர்காலத்தை திட்டமிட வேண்டும்!
பிரகாஷ்ராவ் வேண்டுகோள்!

செய்தியாளர் : ஹரிஸ்ரீனிவாஸ் குணாளன்
சுங்கை பூலோ, மாரச் 19-
        இந்திய இளைஞர்கள் "ஆழப்போறான் தமிழன்" பாடலுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்று சுபாங் இந்தியர் நல இயக்குநர் பிரகாஷ்ராவ் வலியுறுத்தியுள்ளார்.
           இளைஞர்கள் வருங்கால தூண்கள். அடுத்த தலைமுறைக்கு அடித்தளம் அமைப்பவர்கள் இளைஞர்கள். இந்திய இளைஞர்களின் நலனில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்பது அவர் மேற்கொண்டு வரும் பல நடவடிக்கைகள் வழி தெரியவந்துள்ளதாக சுங்கை பூலோவில் இந்திய இளைஞர்களுக்கான அஸ்கார் வத்தானியா கருத்தரங்கில் உரையாற்றுகையில் பிரகாஷ்ராவ் தெரிவித்தார்.
         இளைஞர்கள் புத்தாக்க சிந்தனையோடு தங்கள் எதிர்காலத்தை நோக்கி நகர வேண்டும்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள இளைஞர்கள் வாய்ப்புகளைத் தேட வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்தில் வந்திருக்கிறீர்கள்.
உங்கள் லட்சியத்தை இத்தகைய வாய்ப்புகள் வழி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரகாஷ்ராவ் சொன்னார்.
           இந்த இராணுவ கருத்தரங்கை பிரான்சிஸ் ஏற்பாடு செய்திருந்தார். இதில் சுபாங் தொகுதி மஇகா தலைவர் சௌந்தராஜன், புஷ்பநாதன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
       இந்நிகழ்வில்  நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments