கோல்பீல்ட் தமிழ்ப்பள்ளி் நிலம், நிதி விவகாரம்! குணராஜ் பதில் தேவையில்லை! மந்திரி புசார் பதில் சொல்லட்டும்! பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் பிரான்சிஸ் பதிலடி!

கோல்பீல்ட் தமிழ்ப்பள்ளி் நிலம், நிதி விவகாரம்!
குணராஜ் பதில் தேவையில்லை!
மந்திரி புசார்  பதில் சொல்லட்டும்!
பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் பிரான்சிஸ் பதிலடி!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 14-
         கோல்பீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம், நிதி தொடர்பில் மாநில மந்திரி பெசார் அஸ்மின் அலி பதில் சொல்ல வேண்டும் என்று பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் பிரான்சிஸ் கூறினார்.
         கோல்பீல்ட் தமிழ்ப்பள்ளி 6 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2012இல் 18 வகுப்பறைகள் உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 6 ஆண்டுகளுக்கு முன்பு  40 லட்சம் வெள்ளியில் 18 வகுப்பறைகள் கொண்ட பள்ளியாக பல வசதிகளுடன் கட்டத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் 6 வகுப்பறைகள், ஆசிரியர் அறை, சிற்றுண்டிச் சாலை உள்ளிட்ட சில வசதிகளுடன் மட்டுமே கட்ட முடியும் என்று குத்தகையாளர்கள் கூறிவிட்ட நிலையில் இதுதொடர்பில் பள்ளி மேலாளர் வாரியத்திடம்  ஏன் பேச்சு நடத்தவில்லை  என்று பிரான்சிஸ் கேள்வி எழுப்பினார்.
           இந்த விவகாரம் தொடர்பில் குணராஜ் பதில் எங்களுக்குத் தேவையில்லை. அஸ்மின் அலி பதில் சொல்ல வேண்டும் என்று பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார்.
        கடந்த 20.08.2017இல் பள்ளி வளாகத்தில் நடந்த அமைதி மறியலில் குணராஜ் கலந்து கொண்டார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இப்போது பதில் கொடுக்க மட்டும் வந்து விட்டார். பதில் சொல்ல வேண்டிய அஸ்மின் அலி பதில் சொல்லட்டும் என்று பிரான்சிஸ்  தெரிவித்தார்.
           கடந்த 2012இல் டான்ஸ்ரீ காலிட் 40 லட்சம் வெள்ளி செலவில் பள்ளியை கட்டத் திட்டமிட்டு 18 வகுப்பறைகள், ஆசிரியர் அறை, கணினி அறை, அறிவியல் கூடம், சிற்றுண்டிச் சாலை, 800 பேர் அமரக்கூடிய மண்டபம் என்று கட்டத் திட்டமிடப்பட்டதை தற்போதைய மந்திரி பெசார் அஸ்மின் அலி மாற்றியதால் இவ்விவகாரம் சர்ச்சையானது.

Comments