சுங்கை பூலோ வட்டார மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் சுபாங் நாடாளுமன்ற இந்தியர் நல இயக்குநர் பிரகாஷ்ராவ்!

சுங்கை பூலோ வட்டார மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் சுபாங் நாடாளுமன்ற இந்தியர் நல இயக்குநர் பிரகாஷ்ராவ்!

குணாளன் மணியம்

சுங்கை பூலோ, மார்ச் 21-
        சுபாங் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்டார் பாரு சுங்கை பூலோ வட்டாரத்தில் இந்தியர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுபாங் நாடாளுமன்ற இந்தியர் நல இயக்குநர் பிரகாஷ்ராவ் கூறியுள்ளார்.
           பண்டார் பாரு சுங்கை பூலோவில் பலர் அடிப்படை பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இதில் கால்வாய் பிரச்சினை, வெள்ளப் பிரச்சினை, ஸ்டார் கடைகளுக்கு லைசென்ஸ் இல்லாதது உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பண்டார் பாரு சுங்கை பூலோவிற்கு வருகை மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்த போது பிரகாஷ்ராவ் தெரிவித்தார்.
          சுபாங் நாடாளுமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் பிரச்சினைகள் கவனிக்கப்படவில்லை. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
கால்வாய் போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாததால் மக்கள் வெள்ளப் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால் சுபாங் மஇகா சார்பில் இங்குள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரகாஷ்ராவ் குறிப்பிட்டார்.
         பண்டார் பாரு சுங்கை பூலோவிற்கு வருகை மேற்கொண்ட பிரகாஷ்ராவ் மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments