இந்திய சமுதாயத்தின் மீது தனி அக்கறை கொண்டவர் டத்தோஸ்ரீ நஜிப்! கோடிக் கணக்கில் அள்ளிக் கொடுத்திருக்கிறார்! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் புகழாரம்

இந்திய சமுதாயத்தின் மீது தனி அக்கறை கொண்டவர் டத்தோஸ்ரீ நஜிப்!
கோடிக் கணக்கில் அள்ளிக் கொடுத்திருக்கிறார்!
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் புகழாரம்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 21-
       இந்திய சமுதாயத்தின் மீது அதிக அக்கறை கொண்டு கோடிக் கணக்கில் அள்ளிக் கொடுத்தவர் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் என்று நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
    ஒரு நாட்டின் பிரதமர் மக்கள் மீது அக்கறை கொண்டிருப்பது வழக்கமான ஒன்று. ஆனால், நமது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இந்திய சமுதாயத்தின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். வேறு எந்த நாட்டிலும் நடக்காத ஒன று மலேசியாவில் நடக்கிறது என்று தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
           மலேசியாவில் மூவின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு காலத்தில் இந்திய சமுதாயத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை என்ற நிலை இருந்து வந்தது. ஆனால், நமது மதிப்புமிகு பிரதமர் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு பல்வேறு வகையில் கோடிக் கணக்கான வெள்ளியை வழங்குயிருக்கிறார் என்றார் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.
           தமிழ்ப்பள்ளி, செடிக், தெக்கூன், அமானா இக்தியார் என்று இந்தியர்களுக்கு பலநிலைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இத்திட்டத்தில் பங்கேற்ற பலர் வாழ்க்கையில் வெற்றி கண்டுள்ளனர். இந்த பெருமையெல்லாம் நமது பிரதமருக்குத்தான் சேர வேண்டும் என்று மஇகா உதவித் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் சொன்னார்.
         இந்திய சமுதாயம் அடுத்த 20 ஆண்டுகளில் முழுமையான மேம்பாட்டைக் காண வேண்டும் என்பதற்காக புளுபிரிண்ட் எனப்படும் வியூகப் பெருந்திட்டத்தை அமல்படுத்தி செடிக் மூலம் செயல்படுத்தி வருகிறார். மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் இந்தியர்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தி வரும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களுக்கு இந்திய சமுதாயத்தின் சார்பில் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Comments