மஇகா தொகுதி, கிளைத் தலைவர்கள் கட்சிக்காக உழைக்கத் தயங்க க் கூடாது! மஇகா உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் வலியுறுத்து

மஇகா தொகுதி, கிளைத் தலைவர்கள் கட்சிக்காக உழைக்கத் தயங்க க் கூடாது!
மஇகா உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் வலியுறுத்து

செய்தியாளர் :
 குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 30-
      நாடு தழுவிய நிலையில் இருக்கும் மஇகா தொகுதி, கிளைத் தலைவர்கள் கட்சிக்காக உழைக்கத் தயங்கக் கூடாது என்று
மஇகா உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
         இந்தியர்களின் தாய்க்கட்சி என்று போற்றப்படும் மஇகாவிற்காக உழைத்தத் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள்.
இத்தகைய தலைவர்கள் பதவி, பட்டத்திற்காக உழைத்தவர்கள் அல்லர்.மாறாக கட்சி, மக்கள் என்ற நிலையில் சுயநலம் பார்க்காமல் பொதுநல எண்ணத்தோடு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
         மஇகா நமது கட்சி. நாம் ஏன் கட்சிக்கு உழைக்க வேண்டும். நமக்கென்ன கிடைக்கப் போகிறது என்று நினைக்காமல் கட்சிக்காக உழைப்பதை கடமைக்கு மேலாக நினைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஜொகூர் தெங்காரோ, பகாங் சிராய் தொகுதி, கிளைத் தலைவர்களை சந்தித்த போது மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் அவ்வாறு சொன்னார்.
           கட்சிக்காக உழைத்தவர்களுக்கு கண்டிப்பாக அங்கீகாரம் உண்டு என்பதை நினைத்துக் கொள்ள வேண்டும். கட்சியில் தற்போது இளைஞர்கள் அதிகம் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள். இத்தகைய இளைஞர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு உண்டு. நான் இன்று மேலவைத் தலைவராக இருப்பது உங்களால்தான் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தொகுதி, கிளைத் தலைவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
          இந்த நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அவர்களுக்கு தொகுதி தலைவர்கள் பொன்னாடை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தொகுதி, கிளைத் தலைவர்களுக்கு தன் அலுவலகத்தை சுற்றி காண்பித்ததோடு மதிய உணவு வழங்கி உபசரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments